Home
JULY
ஜூலை-02. தமிழக பொறியலாளர், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குனர்- மயில்சாமி அண்ணாதுரை (Mylswamy Annadurai) பிறந்த தினம்.
ஜூலை-02. தமிழக பொறியலாளர், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குனர்- மயில்சாமி அண்ணாதுரை (Mylswamy Annadurai) பிறந்த தினம்.
06:34
Read
இன்று பிறந்த நாள்:- ஜூலை-02.
தமிழக பொறியலாளர், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குனர்-
மயில்சாமி அண்ணாதுரை
(Mylswamy Annadurai) பிறந்த தினம்.
பிறப்பு:-
1958 ஆம் ஆண்டு, ஜூலை-2 ஆம் தேதி, கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா கோதாவடி கிராமத்தில் பிறந்தார். 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை தாய்மொழி தமிழில் அடிப்படைக் கல்வியைத் அரசு பள்ளியில் படித்தார்.
மேல்வகுப்பு பொள்ளாச்சி நல்லமுத்துக் மகாலிங்கம் கல்லூரியிலும், பொறியியல் இளநிலையைப் பட்டப் படிப்பை அரசு தொழில் நுட்பக்கல்லூரியிலும், பொறியியல் முது நிலைப் பட்டப் படிப்பை பூ.சா.கோ.தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் பொறியியல் முனைவர் பட்டத்தை அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.
விண்வெளித் தொழில் நுட்ப ஆய்வு மற்றும் பதவிகள் :-
1982 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தில் அறிவியல் ஆய்வராச் சேர்ந்து, தனது உழைப்பாலும் கண்டுபிடிப்புகளாலும் படிப்படியாக உயர்ந்து இன்று இந்திய விண்வெளி ஆய்வின் ஒரு முக்கிய அறிவியலாளராகத் தனது பெயரைப் பதித்துள்ளார். எட்டு இந்திய தேசிய செயற்கைக் கோள்களின் செயல் திட்ட இயக்குனராகச் சிறப்பாற்றினார்.
2004 இல் இந்தியாவின் முதல் நிலவுக்கலத் திட்டத்தின் இயக்குனராக உயர்ந்தார்.
கிட்டத்தட்ட 3000 இந்திய மற்றும் சர்வதேச அறிவியலாளர்களைத் தலைமை தாங்கி நிலவில் நீர்கண்டு பிடித்தது ஒரு வரலாற்று நிகழ்வு ஆகும்.
சந்திரயான்-1 திட்டத்தின் வெற்றிக்குப் பின், இந்தியாவின் முதல் நுண்ணலைத் தொலையுணர் செயற்கைக் கோள் உட்பட அனைத்துத்
தொலையுணர் செயற்கைக் கோள்கள், இந்தியாவின் முதல் செவ்வாய்ப் பயணச் செயற்கைக்கோள், இந்தியாவின் இரண்டாவது நிலவுப் பயணம் போன்ற அறிவியல் செயற்கைக் கோள்களுடன் இந்தியக் கல்லூரி மாணவர்களின் செயற்கைக் கோள்கள் எனப் பெரிய செயற்கைக் கோள்ப்பட்டாளத்தின் தலைமைத் திட்ட இயக்குனராக உயர்ந்திருக்கிறார்.
இன்று இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் செயற்கைகோள் மையத்திற்கு இயக்குநராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்ப்பணி & நூல்கள்:-
வளரும் அறிவியல்
என்ற மாத இதழின் கவுரவ ஆசிரியராக இருக்கிறார்.
கோவைச் செம்மொழி மாநாட்டில் முப்பது அறிவியலாளர்களைக் கொண்டு தலைலைதாங்கி நடத்திய “அறிவியல் தமிழ் ஆய்வரங்கம்” மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
இவரது இளமை, கல்வி மற்றும் விண்வெளி ஆய்வு அனுபவங்களடங்கிய “கையருகே நிலா” என்ற புத்தகமும்,
“அரசுப் பள்ளி பாழல்ல அன்னைத்தமிழும் பாழல்ல” என்ற இவரது கவிதையும் , தமிழகப் பள்ளி மாணவர்களால் அதிகம் படிக்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் செவ்வாய்ப்பயணம் பற்றிய தொடர் கட்டுரை தினத் தந்தியில், "கையருகே செவ்வாய்" என்ற தலைப்பில் ஞாயிறு தோறும் எழுதுகிறார்.
விருதுகள்&
பட்டங்கள்:-
கர்மவீரர் காமராசர் நினைவு விருது,
4 -இந்திய விண்வெளி ஆய்வு விருதுகள்,
5- முனைவர் பட்டங்கள்,
சந்திரயான்-1 திட்டத்திற்காக மூன்று சர்வதேச விருதுகள்,
சர்.சிவி.இராமன் நினைவு அறிவியல் விருது,
தேசிய ஏரோநாட்டிகல் அறிவியல் தொழில் நுட்ப விருது என பல விருது பெற்றுள்ளார்.
இன்னும் பல ஆண்டுகள் இவரது செயல் முறை ஆய்வுப்பணிகள் இந்திய அறிவியல் ஆராய்ச்சிகளில்
ஈடுபட்டு உலக அரங்கில் இந்தியவை உயர்ந்த பாதைக்கு அழைத்து செல்வார் என்பது
சிறப்பாகும்.
ஜூலை-02. தமிழக பொறியலாளர், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குனர்- மயில்சாமி அண்ணாதுரை (Mylswamy Annadurai) பிறந்த தினம்.
Reviewed by rajkumar sathish
on
06:34
Rating: 5
Reviewed by rajkumar sathish
on
06:34
Rating: 5


No comments: