புவி ஈர்ப்பு விசை பற்றிய அறிவியல் பாடல்கள்
🍎🍎🍎🍎🍎🍎🍎
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
#அறிவியல் #பாடல்கள்:- 06.
#புவி #ஈர்ப்பு #விசை
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
அழகிய ஆப்பிள் பழமொன்று
அறுந்து கீழே வீழ்ந்ததே!
நியூட்டன் என்ற விஞ்ஞானி
நோட்டமிட்டுச் சிந்தித்தான்,
பக்கவாட்டில் செல்லாமல்
பழமும் தரையில் வீழ்ந்ததேன்
வானம் நோக்கிச் செல்லாமல்
பூமிநோக்கி வந்ததேன்?
கேள்விக் கணையைத் தொடுத்திட்டான்,
ஏற்ற பதிலும் கண்டிட்டான்;
புவியின் ஈர்ப்பு விசையாலே
பொருளும் கீழே வீழ்ந்ததே;
ஏன் எதற்கு எப்படி
என்ற வினாவை எழுப்பிடு!
ஏற்ற பதிலைக் கண்டிடு
ஏற்றம் பெற்று வாழ்ந்திடு.
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎


No comments: