Breaking

ஜூலை-02-விண்வெளி ஆய்வு வித்தகர் டாக்டர் #மயில்சாமி #அண்ணாதுரை பிறந்த நாள்..


விண்வெளி ஆய்வு வித்தகர் 
டாக்டர் #மயில்சாமி #அண்ணாதுரை 
பிறந்த நாள்:-
இன்று ஜூலை 02-1958)
            
🎂தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்வெளி
ஆய்வுப்பொறியியலாளர்.

💐இவரே முதன்முதல்நிலாவுக்கு 
ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திரயான்-1 
திட்டத்தின் செயல்திட்ட இயக்குனர். 

💐இவர் கோயம்புத்தூர்அரசு பொறியியல்
கல்லூரியில்தனது பொறியியல்
இளங்கலைக் கல்வியைக்கற்றார்.

💐கோயம்புத்தூர் பூ.சா. கோ. தொழில்நுட்பக்
கல்லூரியில்பொறியியலில்  முதுநிலைப் 
பட்டம்  பெற்றார்.

💐அண்ணாதுரை இதுவரை ஐந்துமுனைவர்
பட்டங்களைப்பெற்றுள்ளார்.

💐அண்ணாதுரை தனது விடுமுறை நாட்களில்
பள்ளி மற்றும்கல்லூரி மாணவர்களுடன்
செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

🎂மாணவர்களும்அவரது பேச்சை மிகவும்
ஆவலுடன் கேட்கின்றனர்.

🎂அதனால் இவர் "இளைய கலாம்"என்று 
அன்புடன்அழைக்கப்படுகிறார்.

💐தற்போதையஇளைஞர்களுக்கு வழிகாட்டும்
வகையில்,"கையருகே நிலா" என்னும்
தலைப்பில் தமது தொடக்கநாட்கள், சந்திரயான்
பணி ஆகியவை அடங்குவதான நூல்ஒன்றை எழுதியுள்ளார்.

🎂இந்தியாவின் முதல்செவ்வாய்ப் பயணம் 
பற்றியதொடர்கட்டுரை ஒன்றைத் 
தமிழ்நாளிதழான தினத் தந்தியில்,"கையருகே செவ்வாய் " என்றதலைப்பில் வாரந்தோறும்
ஞாயிறன்று எழுதி அது புத்தகமாகவும்
வெளிவந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

💐தமிழகப் பள்ளிக்கல்வியின்பத்தாம் வகுப்பு அறிவியல்பாடப் புத்தகத்தில்மயில்சாமி 
அண்ணாதுரை அவர்களின் வாழ்க்கைக்
குறிப்பு இடம்பெற்றுள்ளது ஒரு சிறப்பாகும்.

பிறப்பும் கல்வியும்...

🎂1958ஆம்ஆண்டு ஜூலைத்திங்கள்
இரண்டாம்நாள் கோவை மாவட்டம்
பொள்ளாச்சித்தாலுகா கோதாவடி கிராமத்தில்
திரு.மயில்சாமி செங்குந்தர் திருமதி.பாலசரசுவதி 
அம்மையார் இணையருக்கு மகனாய்ப்
பிறந்தார். 

💐பதினோராம்வகுப்பு வரையானதனது 
அடிப்படைக்கல்வியைத் தாய்மொழியாம்
தமிழில் அரசாங்கப்பள்ளிகளிலேயே படித்தவர்.

🎂புகுமுகவகுப்பை பொள்ளாச்சி நல்லமுத்துக்
கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியிலும்,

🎂பொறியியல் இளநிலையைப்பட்டப் 
படிப்பை அரசு தொழில்நுட்பக்கல்லூரியிலும்
பொறியியல் முது நிலைப்பட்டப் படிப்பை 
கோவை பூ.சா.கோ.தொழில் நுட்பக்கல்லூரியிலும்
முடித்தார்.

🎂பொறியியல் முனைவர்பட்டத்தை அண்ணா 
தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பெற்று, 
முழுக்க முழுக்கத்தமிழகத்திலேயே தனது
கல்வியைப் படித்தவர் இன்றைய இந்த 
நிலவுத் தமிழர்.

🎂விண்வெளித் தொழில்நுட்ப ஆய்வுக்
கழகத்தில்1982ஆம் ஆண்டு இந்திய அறிவியல்
ஆய்வராச் சேர்ந்து,தனது தளராத உழைப்பாலும் 
பற்பல கண்டுபிடிப்புகளாலும் படிப்படியாக
உயர்ந்தார்.

🎂இந்திய விண்வெளி ஆய்வின் ஒரு முக்கிய அறிவியலாளராகத்தனது பெயரைப்
பதித்துள்ளார். 

💐எட்டு இந்தியதேசிய செயற்கைக்கோள்களின் 
செயல் திட்டஇயக்குனராகச் சிறப்பாகப்
பணி புரிந்தபின்2004இல் இந்தியாவின் முதல் நிலவுக்கலத்திட்டத்தின்இயக்குனராக உயர்ந்தார்.

கிட்டத்தட்ட 3000 இந்திய மற்றும் சர்வதேச
அறிவியலாளர்களைத்தலைமை தாங்கி நிலவில்
நீர்கண்டு பிடித்தது ஒரு வரலாற்று நிகழ்வு.

💐சந்திரயான்-1 திட்டத்தின்வெற்றிக்குப் பின்,
இந்தியாவின் முதல் நுண்ணலைத் தொலையுணர்வு
செயற்கைக் கோள் உட்படஅனைத்துத் தொலையுணர்வு
செயற்கைக் கோள்கள்,

💐இந்தியாவின்முதல்செவ்வாய்ப்பயணச்
செயற்கைக்கோள்,

💐இந்தியாவின் இரண்டாவது நிலவுப் பயணம்
போன்ற அறிவியல் செயற்கைக் கோள்களுடன்
இந்தியக் கல்லூரி மாணவர்களின் செயற்கைக் கோள்கள் எனப்பெரிய செயற்கைக்கோள்ப்
பட்டாளத்தின்தலைமைத் திட்டஇயக்குனராக
உயர்ந்தார் முனைவர் திரு.மயில்சாமி அண்ணாதுரை.

💐இன்னும் பத்து ஆண்டுகள்இவரது செயல்முறை ஆய்வுப்பணிகள்தொடர வாய்ப்புக்கள் இருப்பது இன்னும்ஒரு சிறப்பு.

தமிழ்ப்பணி,,,,,,,,.

🎂தனது அறிவியல்பணிக்கு வெளியில்
தாய்த்தமிழ் மீது பற்றும் தணியாத தாகமும்
கொண்டவர் திரு.மயில்சாமி அண்ணாதுரை.

🎂'வளரும் அறிவியல்' என்று தமிழில்
வெளிவரும் அறிவியல் மாதஇதழின் 
கௌரவ ஆசிரியர்.

🎂தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை 
கொண்ட சிறந்தபேச்சாளர், கவிஞர்,
கட்டுரையாளர். மனிதநேயம்கொண்ட 
சிறந்த மனிதர். 

🎂சனி,ஞாயிறுகளில் பள்ளி மற்றும்
கல்லூரி மாணவர்களிடையேபேசுவதை 
வழக்கமாகக்கொண்டிருக்கிறார்.

🎂ஓய்வு நேரங்களில்முகநூலின் மூலம் இளைய
சமுதாயத்திடம்தொடர்பு கொண்டு கணிணி
வாயிலாய், அறிவியல்பார்வை மற்றும் சமூகப்
பணியுடன்தமிழார்வத்தையும்ஊட்டி வருகிறார்.

🎂இந்திய நகரங்களின் பலதமிழ்ச்சங்கங்களிலும்,
அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர்த் தமிழ்அமைப்புகளிலும்
அறிவியல் தமிழில் சிறப்புரை ஆற்றியுள்ளார்.

🎂கோவைச்செம்மொழி மாநாட்டில்முப்பது அறிவியலாளர்களைக்கொண்டு தலைலை
தாங்கி நடத்திய “அறிவியல் தமிழ்.ஆய்வரங்கம்” எல்லோராலும்tபேசப்பட்ட ஒன்று.

💐இவரது இளமை,கல்வி மற்றும் விண்வெளி 
ஆய்வு அனுபவங்களடங்கிய“கையருகே நிலா” 
என்றபுத்தகமும், “அரசுப்பள்ளி பாழல்ல
அன்னைத்தமிழும் பாழல்ல”என்ற இவரது 
கவிதையும் ,தமிழகப் பள்ளி மாணவர்களால்
அதிகம் படிக்கப்படுகிறது.

🎂தமிழகப்பள்ளி இறுதி வகுப்பு அறிவியல் 
புத்தகத்தில்இவரது வாழ்க்கைக்குறிப்பும்
அறிவியல்பணியும் குறிப்பிடப்பட்டிருப்பது 
ஒரு சிறப்பாகும்.

பெற்ற பட்டங்களும்சிறப்புக்களும்,,,,,,,,

💐மயில்சாமி அண்ணாதுரை இது வரை 
ஐம்பதுக்கும்மேற்பட்ட பரிசுகளைப்பெற்றுள்ளார். 

💐அவற்றில் சில
பரிசுகளும் பட்டங்களும்,,,,,,,

💐கர்மவீரர் காமராசர்நினைவு விருது

💐நான்கு இந்தியவிண்வெளி ஆய்வு 
விருதுகள்.

💐ஐந்து முனைவர் பட்டங்கள்.

 💐சந்திரயான்-1திட்டத்திற்காகமூன்று சர்வதேச விருதுகள்.

💐ஆஸ்திரேலியா-இந்தியா இன்ஷ்டட்ியூட்டின்
மேல்னிலை விருது.

💐சர்.சிவி.இராமன் நினைவு அறிவியல்
விருது.

💐ஹரி ஒம் ஆஷ்ரம் ப்ரடிட்விகரம் சாராபாய் 
அறிவியல் ஆய்வு விருது.

💐கர்நாடக மாநிலஅரசின்அறிவியலுக்கான விருது.

💐எச்.கே..ப்ரோடிய தேசியஅறிவியல் விருது.

💐தேசிய ஏரோநாட்டிகல்அறிவியல் தொழில் நுட்ப
விருது.

💐ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி தேசிய அறிவியல்
விருது.

💐அமர பாரதி தேசியஅறிவியல் விருது.

💐தேசிய தரமையத்தின் பஜாஃஜ் நினைவு விருது.

💐கொங்குச் சாதனையாளர்விருது.

💐தமிழ் மாமணி விருது ., திருப்பூர்தமிழ்ச்சங்கம்.

💐அறிவியல் அண்ணா விருது ,கர்நாடகா 
தமிழ்பேரவை,ஹுப்ளி.

💐டாக்டர் இரஜா சர்முத்தையா செட்டியார்
பிறந்த நாள் நினைவுப்பரிசு 2012.

💐தமிழ்நாடு செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பில் கௌரவிக்கப்பட்டார்.

💐தற்போது தமிழ்நாடு அறிவியல் தொழில்
நுட்ப அமைப்பின் (கவுன்சிலின் TNSCST) துணைத்
தலைவர் பதவி வகிக்கிறார்.

அவர் எல்லா நலன்களும் பெற்று இந்திய
அறிவியல் , விண்வெளித் துறையில் பல சாதனைகள் புரிந்தார்.

No comments:

Powered by Blogger.