Breaking

ஜூலை-04. இருபதாம் நூற்றாண்டின் பெண் வானவியலாளர், அண்டங்கள் மற்றும் ஒளிமிகு விண்மீன்களின் தொலைவைத் துல்லியமாகக் கணித்தவர்- ஹென்ரியேட்டா சுவான் லீவிட் (Henrietta Swan Leavitt) பிறந்த தினம்.



இன்று பிறந்த நாள்:- ஜூலை-04.
 
இருபதாம் நூற்றாண்டின் பெண் வானவியலாளர்,
அண்டங்கள் மற்றும் ஒளிமிகு விண்மீன்களின் தொலைவைத் துல்லியமாகக் கணித்தவர்-
ஹென்ரியேட்டா சுவான் லீவிட்
(Henrietta Swan Leavitt) பிறந்த தினம்.


பிறப்பு:-

மாசசூசெட்ஸ்-ல் உள்ள லான்கேச்டெர் என்ற இடத்தில் ஜூலை-4, 1868 இல் பிறந்தார். 

1892-ல் அமெரிக்காவின் ரெட்கிளிஃப் கல்லூரியில் பட்டம் படித்தார். 

ஆய்வுகள்:-

1880 முதல் ஹார்வாட் வானாராய்ச்சி நிலையத்தில் எடுக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான புகைப்படத் தட்டுகளை ஆய்வு செய்யப் பெண்கள் பலர் நியமிக்கப்பட்டிருந்தனர். அப்பணியில் 1983-ல் ஹென்ரிட்டா லீவிட்டும் ஈடுபட்டார். அக்காலத்தில் தொலைநோக்கியை இயக்க பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்தப் புகைப்படத் தட்டுகளில் பல விண்மீன்கள், நெபுலாக்கள் போன்றவற்றின் நிறமாலை போன்ற விவரங்களும் இருந்தன. இவற்றில் சீபிட்ஸ் (Cepheid Variable Stars) என்றழைக்கப்பட்ட குறிப்பிட்ட வகை விண்மீன்களின் ஒளி மாறுபாட்டு வேகமும், அவற்றின் ஒளிர் திறனும் (Luminosity) நேர் விகிதத்தில் இருப்பதைக் கண்டார். இக்கண்டுபிடிப்பை அவர் 1908 ஆம் ஆண்டு நிகழ்த்தினார்.

வான்பொருளின் தொலைவைக் கண்டறிதல்:-

ஒரு விண்மீனின் ஒளி குறைந்து பின்னர் மீளும் காலம் இரண்டு நாள்கள் எனக் கொண்டால் இதனை அந்த விண்மீனின் ஒளி மாறுபாட்டுக் காலம் என அழைப்பர். 

இதனை வரைபடம் மூலமாக வகுத்துத் தந்தார். 

இதன் மூலம் "பேரண்டவியல் கொள்கைக்கு" வித்திட்டு புகழ் பெற்றார்.

சிறப்புகள்:-

நிலாவில் உள்ள சிறுகோள் 5383 மற்றும் லீவிட் குழிப்பள்ளம்
ஆகியவை இவர் பெயரால் வழங்கப்படுகிறது.

டெக்சாஸில் உள்ள மெக்டொனால்ட் ஆய்வகத்தில் அமைந்துள்ள ASAS-SN தொலைநோக்கிகளில் ஒன்று இவருக்கு கௌரவத்திற்காக பெயரிடப்பட்டுள்ளது.

இறப்பு:-

டிசம்பர் -12, 1921ஆம் ஆண்டு தனது  53 வது வயதில்
கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸ், அமெரிக்காவில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.