ஜூலை-04.பிரஞ்சு இயற்பியல் மற்றும் வேதியியலாளர், கதிரியக்கத்தில் ஆய்வு செய்த பெண் ஆராய்ச்சியாளர்- மேரி க்யூரி (Marie Skłodowska Curie) மறைந்த தினம்.
இன்று நினைவு நாள்:- ஜூலை-04.
பிரஞ்சு இயற்பியல் மற்றும் வேதியியலாளர், கதிரியக்கத்தில் ஆய்வு செய்த பெண் ஆராய்ச்சியாளர்-
மேரி க்யூரி
(Marie Skłodowska Curie)
மறைந்த தினம்.
பிறப்பு:-
போலந்து தலைநகர் வார்சாவில் நவம்பர்-7, 1867 இல் பிறந்தார்.
பள்ளி ஆசிரியரான தந்தையிடம் கணிதம், இயற்பியல் கற்றார்.
பிறகு பாரீஸ் சென்று சோர்போன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வேதியியல், கணிதம் பயின்றார்.
ஆய்வுகள்:-
பியரி என்ற ஆராய்ச்சியாளருடன் இணைந்தனர்.
எக்ஸ் கதிர்களை ஆராய்ந்து வந்த பெக்கரெல், ஆய்வு பணியை மேரியிடம் ஒப்படைத்தார். தம்பதிகள் இணைந்து ஆராய்ச்சிகளில் இறங்கினர்.
யுரேனியம் விலை அதிகம் என்பதால், ஆஸ்திரியாவில் யுரேனியத்தைப் பிரித்தெடுத்த பகுதியில் தேவை இல்லாதவற்றை கொண்டு வந்து, அவற்றை மண்ணைக் கரைத்து, கொதிக்க வைத்து ஆய்வு செய்தனர்.
யுரேனியக் கதிர் போல 300 மடங்கு ஆற்றல் கொண்ட கதிர்களைக் கண்டறிந்தனர்.
மேலும் யுரேனியக் கழிவில் இருந்து "பொலோனியம் தனிமத்தைக்" கண்டறிந்தார்.
பிறகு ரேடியக் கூட்டுப் பொருளின் படிவங்களை பிரித்தெடுத்து, "ரேடியம் தனிமத்தை" தனியாகப் பிரித்தார். இது
புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பணிகள்:-
கணவர் இறந்த பிறகு, அவரது பேராசிரியர் பணியை பிரான்ஸ் அரசு இவருக்கு வழங்கியது.
பிறகு பாரீஸ் பல்கலைக்கழகத்தின் முதல் பேராசிரியையாக பணிபுரிந்தார்.
விருதுகள்:-
இயற்பியல் நோபல் பரிசு (1903)
டேவி மெடல் (1903)
மேட்டூசி மெடல் (1904)
எலியட் க்ரஸன் பதக்கம் (1909)
ஆல்பர்ட் மெடல் (1910)
வேதியியல் நோபல் பரிசு (1911)
வில்லார்ட் கிப்ஸ் விருது (1921)
இறப்பு:-
கதிர்வீச்சால் தன் உறுப்புகள் பாதிக்கப்பட்டும் ஆராய்ச்சி மேற்கொண்ட இவர், ஜூலை-4, 1934 இல் தனது 66 வது வயதில்
பாசி, ஹாட்-சவோயி, பிரஞ்சு குடியரசில் மரணமடைந்தார்.


No comments: