Home
JULY
ஜூலை-05. 20 ஆம் நூற்றாண்டின் முன்னணி பரிணாம உயிரியலாளர், பறவையியலாளர்- எர்ன்ஸ்ட் வால்டர் மேயர் (Ernst Walter Mayr) பிறந்த தினம்.
ஜூலை-05. 20 ஆம் நூற்றாண்டின் முன்னணி பரிணாம உயிரியலாளர், பறவையியலாளர்- எர்ன்ஸ்ட் வால்டர் மேயர் (Ernst Walter Mayr) பிறந்த தினம்.
12:22
Read
இன்று பிறந்த நாள்:- ஜூலை-05.
20 ஆம் நூற்றாண்டின் முன்னணி பரிணாம உயிரியலாளர், பறவையியலாளர்-
எர்ன்ஸ்ட் வால்டர் மேயர் (Ernst Walter Mayr) பிறந்த தினம்.
பிறப்பு:-
ஜூலை- 05, 1904 ஆம் ஆண்டு
கெம்ப்டன், பவேரியா,
ஜெர்மனியில் பிறந்தார்.
பள்ளிப் படிப்புடன், ‘சாக்ஸோனி’ பறவையியல் சங்கத்தில் சேர்ந்து பறவையியல் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
அதோடு, கிரீவ்ஸ்வால்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார்.
ஓராண்டுக்குப் பிறகு மருத்துவப் படிப்பை விட்டுவிட்டு, உயிரியல் துறையில் சேர்ந்தார்.
மேலும், பல அரிய பறவைகளை அடையாளம் காரூம் சோதனையில், மிக சரியாக அடையாளம் காட்டியதால்
இவரை பிறவி வகைப்பாட்டாளர் என்றும் கூறுவார்கள்.
வெப்ப மண்டலப் பிரதேசங்களில் பறவை சேகரிப்பு பயணங்களுக்கான வாய்ப்பைப் பெற பெர்லின் அருங்காட்சியகத்தில் சேர்ந்தார்.
பறவையியலில் 16 மாதங்களிலேயே முனைவர் பட்டம் பெற்றார்.
ஆய்வுப்பயணங்கள்:-
அருங்காட்சியகத்தில் வேலை கிடைத்தது. நியூ கினி தீவில் ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்டார்.
பல்வேறு தீவுகளில் காணப்பட்ட விலங்குகள், தாவரங்கள் இடையே உள்ள வேறுபாடுகளை ஆராய்ந்தார்.
ஆயிரக்கணக்கான பறவைகளின் தோல்களை சேகரித்தார்.
தனது வாழ்நாளில் 26 புதுவகைப் பறவையினங்களுக்கும், 38 புதுவகை பூக்களுக்கும் பெயர் சூட்டியுள்ளார்.
தற்கால பரிணாம வளர்ச்சி ஆராய்ச்சிக் கோட்பாடுகளுக்கும் உயிரியியல் சிற்றின கோட்பாட்டு வளர்ச்சிக்கும் இவரது ஆராய்ச்சிகள் வழிவகுத்தன.
பணிகள்:-
1931-ல் அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் காப்பாளர் பொறுப்பை ஏற்றார்.
1953 இல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார்.
பிறகு அங்குள்ள விலங்கியல் அருங்காட்சியகத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.
1975-ல் ஓய்வு பெற்ற இவர் பல்வேறு பத்திரிகைகளுக்கு 200-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார்.
நூல்கள்:-
1942-Systematics and the Origin of Species, என்னும் நூலை வெளியிட்டார்.
விருதுகள்:-
டேனியல் கிராட் எலியட் பதக்கம் (1967)
நேஷனல் மெடல் ஆஃப் சயின்ஸ் (1969)
லின்னியன் மெடல் (1977)
பால்சன் பரிசு (1983)
டார்வின் மெடல் (1984)
உயிரியலுக்கான சர்வதேச விருது (1994)
க்ராப்போர்டு பரிசு (1999)
இறப்பு:-
இவர் எழுதிய 25 க்கு மேற்பட்ட புத்தகங்களில், 14 நூல்கள் தனது 65 வயதுக்கு மேல் வெளியிட்டு சாதனை படைத்த இவர், பிப்ரவரி-03, 2005 இல் தனது 100 வது வயதில்
பெட்ஃபோர்ட், மாசசூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்காவில் மரணமடைந்தார்.
ஜூலை-05. 20 ஆம் நூற்றாண்டின் முன்னணி பரிணாம உயிரியலாளர், பறவையியலாளர்- எர்ன்ஸ்ட் வால்டர் மேயர் (Ernst Walter Mayr) பிறந்த தினம்.
Reviewed by rajkumar sathish
on
12:22
Rating: 5
Reviewed by rajkumar sathish
on
12:22
Rating: 5


No comments: