Breaking

ஜூலை-05. முதன் முதலில் உயிரியல் மற்றும் வேதியியலில் கதிரியக்க ஐசோடோப்புகளை ஆய்விற்குப் (RADIOCHEMIST) பயன்படுத்திய அறிவியலாளர்- ஜார்ஜ் சார்லஸ் டி ஹெவ்வி (George Charles de Hevesy) மறைந்த தினம்.



இன்று நினைவு நாள்:- ஜூலை-05.


முதன் முதலில் உயிரியல் மற்றும் வேதியியலில் கதிரியக்க ஐசோடோப்புகளை ஆய்விற்குப் (RADIOCHEMIST) பயன்படுத்திய அறிவியலாளர்-
ஜார்ஜ் சார்லஸ் டி ஹெவ்வி
(George Charles de Hevesy)
மறைந்த தினம்.

பிறப்பு:-

ஆகஸ்ட்-01, 1885 இல்
புடாபெஸ்ட், ஆஸ்திரியா-ஹங்கேரியில் பிறந்தார்.
ஒரு ஆண்டு புடாபெஸ்ட் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இவரது ஆய்வுகள் தொடங்கியது.  
1906 இல் அவர் தனது Ph.D. பயின்று, 1908 ஆம் ஆண்டில் இயற்பியலில் தனது முனைவர் பட்டத்தை பெற்றார். 

  


 

ஆய்வுகள்:- 

1911 -ல்  "இயற்கைக் கதிரியக்க தனிமங்களைப் பிரித்து" எடுக்கும் பணி கொடுக்கப்பட்டது. அப்போது அவருக்கு போதிய வருவாய் இல்லாத நிலையில் அவர் தங்கி இருந்த வீட்டு உரிமையாளரிடமே உணவு வாங்கி சாப்பிட்டார். சில நாட்களில்
இவருக்கு ஒரு சந்தேகம், வீட்டுக்கார உரிமையாளரான அந்த பெண்மணி  பழைய உணவையே மறுநாளும்  பரிமாறுகிறாரா என்பதாகும். 

ஒரு நாள் பரிமாறிய உணவில் மீதமிருந்ததில், சிறிது கதிர் ஐசோடோப்புகளைக் கலந்து வீட்டார். அடுத்தடுத்த நாட்களில் உணவு பரிமாறப்பட்ட
போது அவருக்குத் தெரியாமல் சிறிது உணவை எடுத்து,  அவரிடமிருந்த எளிய கருவிகளின் துணையுடன் ஆய்ந்த போது,  வழங்கப்பட்டட உணவு பழையது என்று தெரிந்தது.  

அவர் இதுபற்றி அம்மையாரிடம் கூற, அவர் வீட்டைக் காலி செய்ய வேண்டிய நிலை உருவாயிற்று. இதுவே "கதிரியக்க ஐசோடோப்புடன் செய்யப்பட்ட முதல் பயன்பாட்டுச் சோதனை"
ஆகும்.

இவரது குழுவினர் 1922 இல்
(with Dirk Coster)  எலெமெண்ட்
hafnium (72Hf) கண்டுபிடித்தார்கள்.

பணிகள்:-

ஜெர்மனியில் கார்ல்ஸ்ரூஹில் உள்ள ஃபிரிட்ஸ் ஹேபரில் பணியாற்றினார்.

இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரில் ஏர்னஸ்ட் ரூதர்போர்டுடன் பணியாற்றினார், அங்கே அவர் நீல்ஸ் போரை சந்தித்தார். 

1918 இல் உடல் வேதியியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

விருதுகள்:-

1943-ல் கதிர் ஐசோடோப்புகளை உயிரியலில் குறியிகளாக (TRACER) அணுக்களாகப் பயன்படுத்தியமைக்காக அவருக்கு நோபல் பரிசுவழங்கப்பட்டது. 

copley பதக்கம் (1949) 

ஃபாரடே lectureship பரிசு (1950) 

அணுக்கள் அமைதி விருது (1958) 

இறப்பு:-

ஜூலை-05, 1966 இல் தனது 80 வது வயதில் ஃப்ரீபர்க், மேற்கு ஜெர்மனியில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.