Breaking

ஜூலை-07. அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனரும், பிரபல கண் மருத்துவர்- ஜி. வெங்கடசாமி (Govindappa Venkataswamy) மறைந்த தினம்.



இன்று நினைவு நாள்:- ஜூலை-07.
 

அரவிந்த் கண் மருத்துவமனை
நிறுவனரும், பிரபல கண் மருத்துவர்-
ஜி. வெங்கடசாமி 
(Govindappa Venkataswamy) மறைந்த தினம்.

பிறப்பு:-

அக்டோபர்-01, 1918 ஆம் ஆண்டு
அயன்வடமலாபுரம்-எட்டயபுரம், பிறந்தார்.
எட்டையபுரத்தில் ஆறாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கோவில்பட்டியில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 
மதுரை அமெரிக்கன் கல்லூரியில்இளங்கலை வேதியியல் பட்டம் பெற்றார். சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார்.
1938ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேதியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
1944ல் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில்மருத்துவப் பட்டம் படித்தார்.
1951ல் சென்னை அரசு கண் மருத்துவனையில் கண் மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.

கண் மருத்துவம்:-

ஓரளவு குணமடைந்து எழுந்த இவரிடம் ஒரு நண்பர், இந்தக் கைகளை வைத்துக்கொண்டு மகப்பேறு மருத்துவம் செய்ய முடியாது. எனவே, கண் மருத்துவம் பயிலும்படி ஆலோசனை கூறினார். கண் மருத்துவத்தில் முதுகலை பட்டயப் பட்டமும், கண் அறுவை மருத்துவத்தில் முதுநிலைப் (எம்.எஸ்.) பட்டமும் பெற்ற ஐந்து மருத்துவர்களில் இவரும் ஒருவர். 

1956ஆம் ஆண்டில் மதுரை அரசு மருத்துவமனையில் புதிதாகத் தொடங்கப்பட்ட கண் மருத்துவத் துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

அரவிந்த் கண் மருத்துவமனை:-

1976ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் அரவிந்த் கண் மருத்துவமனையை மதுரையில் 11 படுக்கை வசதியுடன் தொடங்கினார். ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தார். இன்று இந்த மருத்துவமனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளை பரப்பி உலகப் புகழ்பெற்ற கண் மருத்துவமனையாக விளங்கியுள்ளது. ஒவ்வொரு மருத்துவமனையும் இலவசப் பிரிவுடன் செயல்பட்டு வருகிறது.

விருதுகள்:-

பத்ம ஸ்ரீ விருது பெற்றார் - 1973.
1985ல் இலினாய் பல்கலைக் கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம்,
அமெரிக்கக் கண் மருத்துவக் கழகம் - 1993,
ஹெலன் கெல்லர் சர்வதேச விருது - 1987,
மருத்துவர். பி. சி. ராய் விருது – 2001,

இறப்பு:-

ஜூலை-07, 2006 இல்
மதுரை,
தமிழ்நாட்டில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.