Breaking

ஜூலை-05. சுவிட்சர்லாந்து இயற்பியலாளர், வேதியியலாளர், "ஆர்கண்ட் விளக்கு" கண்டுபிடித்தவர்- பிரான்சுவா பியர்ரே அமி ஆர்கன்ட் (François Pierre Ami Argand) பிறந்த தினம்.


#இன்று #பிறந்த #நாள்:- #ஜூலை-05.

சுவிட்சர்லாந்து இயற்பியலாளர், வேதியியலாளர், 
"ஆர்கண்ட் விளக்கு" கண்டுபிடித்தவர்-
பிரான்சுவா பியர்ரே அமி ஆர்கன்ட்
(François Pierre Ami Argand)
பிறந்த தினம்.

#பிறப்பு:-

ஜூலை-05, 1750 இல் 
ஜெனீவாவில் பிறந்தார்.
இவர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் 10 பிள்ளைகளுள் ஒன்பதாவதாகப் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு கைக் கடிகாரம் செய்பவர்.
இவருக்கு அறிவியல் மீதே அதிக ஆர்வம் இருந்தது. இதனால், புகழ் பெற்ற தாவரவியலாளரும், காலநிலையியலாளருமான ஹோராஸ்-பெனடிக்ட் டி சோசுரேஎன்பவரிடம் மாணவராகச்சேர்ந்தார்.

#ஆய்வுகள்:-

இவர் எண்ணெய் விளக்கின்
வடிவமைப்பைப் பெருமளவு மேம்படுத்தினார். இவர் புதிதாக வடிவமைத்த எண்ணெய் விளக்கு இவரது பெயரைத் தழுவி "ஆர்கண்ட் விளக்கு" என அழைக்கப்பட்டது.

#ஆர்கண்ட் #விளக்கு (Argand lamp) :-

1780 ஆம் ஆண்டு இவரது விளக்கிற்கு உரிமம்
பெற்றார்.

இது அக்காலத்தில் இருந்த எண்ணெய் விளக்குகளிலும் 
கூடுதலான ஒளியை வழங்கி வீடுகளில் கிடைக்கக்கூடிய ஒளியின் அளவை மேம்படுத்தியது. 

இது சுமார் 10 மெழுகுதிரிகள் வழங்கக்கூடிய ஒளியை வழங்கக்கூடியது. இது ஒரு வட்டவடிவில் அமைந்த திரியைக் கொண்டது. 

இது ஒன்றினுள் இன்னொன்றாக அமைந்த இரண்டு உலோக உருளைகளுக்கு இடையில் பொருத்தப்பட்டிருந்தது. 

இதனால், திரியின் நடுப்பகுதி ஊடாகவும், வெளிப்புறத்திலும் வளி சென்று வரக்கூடியதாக இருந்தது. 

அக்காலத்து முறையில் தேய்த்துச் செய்யப்பட்ட கண்ணாடி உருளை ஒன்றினால் திரி பக்கங்களில் மூடப்பட்டிருந்தது. 

இது சுவாலையை உறுதியாக எரியும்படி செய்ததுடன், சுவாலையைச் சுற்றிய காற்றோட்டத்தையும் மேம்படுத்தியது. இவ் விளக்கில் திமிங்கில எண்ணெய் போன்ற நீர்ம எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. 

தனியான கொள்கலன் ஒன்றிலிருந்து இந்த எண்ணெய் திரிக்கு வழங்கப்பட்டது. 

இவ்விளக்கின் வடிவமைப்பு கூடுதலான ஒளியைக் கொடுத்தது ஒருபுறம் இருக்க, எண்ணெயும், திரியும் முழு எரிதலுக்கு உள்ளாவதால் அடிக்கடி திரியை வெட்டிச் சுத்தம் செய்யவேண்டிய தேவையும் இருக்கவில்லை.

1850 ஆம் ஆண்டுகள் வரை இவ் விளக்கே எல்லோராலும் விரும்பப்பட்டது. 

#பணிகள்:-

இவர் பாரிசில் இருந்தபோது காலநிலையியல் 
தொடர்பான பல கட்டுரை வெளியிட்டுள்ளார்.

பிறகு, வேதியியல் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

#இறப்பு:-

அக்டோபர்-14, 1803 இல் தனது,  53 வது வயதில்
ஜெனீவா, பிரான்சில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.