Breaking

ஜூலை-15.சர்க்கரை மற்றும் பியூரின் தொகுதிச் சேர்மங்களைச் செயற்கை முறையில் தயாரிக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்தவர்-எர்மான் எமில் லுாயிசு பிசர் (Hermann Emil Fischer) மறைந்த தினம்.


இன்று நினைவு நாள்:- ஜூலை-15.

சர்க்கரை மற்றும் 
பியூரின் தொகுதிச் சேர்மங்களைச் செயற்கை முறையில் தயாரிக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்தவர்-எர்மான் எமில் லுாயிசு பிசர்  (Hermann Emil Fischer) மறைந்த தினம்.

பிறப்பு:-

அக்டோபர்-09, 1852
உசுகிர்சென், ரைன் புரொவின்சுவில் பிறந்தார். இவர் தனது பள்ளிப்படிப்புக்கு பிறகு 
பிசர் பான் பல்கலைக்கழகத்தில் 1871 ஆம் ஆண்டில் சேர்ந்தார். 1872 ஆம் ஆண்டில் அவர் இசுட்ராசுபௌர்க் பல்கலைக்கழத்திற்கு சென்றார். 1874 ஆம் ஆண்டில் அடால்ப் வான் பேயர் என்பவரின் வழிகாட்டுதலில் தனது ப்தாலீன் குறித்த ஆய்வினை முடித்து ஆய்வியல் நிறைஞர் பட்டத்தைப் பெற்றார். அவர் அதே பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்பட்டார்.

கண்டுபிடிப்புகள்:-

1875 ஆம் ஆண்டில் இசுடாசுபர்க் பல்கலைக் கழகத்தில் வான் பேயருடன் பணிபுரிந்த பொழுது, பிசர் பினைல்ஐட்ரசீனைக் கண்டுபிடித்தார்.
மியூனிக் பல்கலைக்கழகத்தில் இருந்த பொழுது, பிசர் ஐதரசீன்கள் தொடர்பான தனது ஆய்வை தனது மைத்துனர் ஓட்டோ பிசருடன் இணைந்து தொடர்ந்தார். பிசரும் ஓட்டோவும் இணைந்து ட்ரைபினைல்மீத்தேன் சாயங்களின் அமைப்பு தொடர்பான ஒரு புதிய கருத்தியலை வெளியிட்டு அதனைச் சோதனை மூலமும் நிரூபித்தனர்.
எர்லாங்கன் பல்கலைக்கழகத்தில், பிசர் தேயிலை, காபி, சாக்கலேட்டின் கோகோ போன்றவற்றில் செயல்படும் கொள்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இவற்றில் காணப்படும் பைன் மற்றும் தியோபுரோமின் ஆகியவற்றைக் குறித்து ஆய்வு மேற்கொண்டு இத்தகைய சேர்மங்களின் தொடர் ஒன்று அமைக்கப்பட்டிருப்பதையும் அவற்றின் தொகுப்பு முறைகளையும் நிறுவினார்.
1880 களுக்கு முன்னதாகவே, குளுக்கோசின் ஆல்டிகைடு வாய்ப்பாடு சுட்டிக்காட்டப்பட்டுள்து. ஆனால், பிசர் சர்க்கரைகளின் ஆக்சிசனேற்றத்தால் கிடைக்கும் ஆல்டோனிக் அமிலம், தனது கண்டுபிடிப்பான பினைல் ஐட்ரசீசன் உடனான வினையின் விளைவாக பினைல் ஐட்ரசோன்கள் மற்றும் ஓசசோன்கள் உருவாக்கம் சாத்தியமானது என்பது உள்ளிட்ட தொடர் மாற்றங்களை நிறுவினார். 
ஒரு பொதுவான ஓசசோனை உருவாக்கும் வினையினை வைத்துக்கொண்டு, குளுக்கோசு, பிரக்டோசு மற்றும் மேனோசு ஆகியவைகளுக்கிடையேயான தொடர்பினை 1888 ஆம் ஆண்டில் நிறுவினார்.


1891 ஆம் ஆண்டிற்கும் 1894 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் அன்றைய நிலையில் அறியப்பட்டிருந்த அனைத்து சர்க்கரைகளுக்குமான முப்பரிமாண அமைப்பினை நிறுவினார். 
படிநிலை இறக்கம், தொகுப்பு முறைகள் மற்றும் மாற்றியமாக்குதல் போன்ற செயல்முறைகளைப் பயன்படுத்தி வெவ்வேறு எக்சோசுகள், பென்டோசுகள், எப்டோசுகள் இவற்றுக்கிடையே ஒன்றை மற்றொன்றாக மாற்தும் தலைகீழ் தொகுப்பு முறைகள் அவரின் தொகுப்பு முறைகளின் வழிமுறையின் மதிப்பை உணர வைத்தது எனலாம். 1890 ஆம் ஆண்டில் அவர் குளுக்கோசு, புரக்டோசு மற்றும் மேனோசு ஆகியவற்றை கிளிசெராலிலிருந்து தொகுப்பு முறையில் தயாரித்தமை அவரின் பணிகளில் மிகப்பெரிய வெற்றியாக விளங்குகிறது. சர்க்கரைகள் தொடர்பான இந்த சிறப்புமிக்க பணிகளெல்லாம் 1884 ஆம் ஆண்டிற்கும் 1894 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்டவை ஆகும். 
தனித்த அமினோ அமிலங்களை அடையாளம் காண்பதற்கும், பிரித்தெடுப்பதற்கும் திறன்மிக்க பகுப்பாய்வு முறைகளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டபோது, புரோலின் மற்றும் ஐதராக்சிபுரோலின் போன்ற புதிய வகை வளைய அமினோ அமிலங்களைக் கண்டுபிடித்தார். அவர் ஒளியியற் பண்புகளை வெளிப்படுத்தும் அமினோ அமிலங்களைப் பெற்று அவற்றிலிருந்து புரதங்களைத் தொகுப்பது தொடர்பாகவும் ஆய்வுகள் மேற்கொண்டார். 

புரதங்களில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றோடு ஒன்று சங்கிலித் தொடர் போல இணைக்கப்பட்டிருப்பதற்குக் காரணமான பிணைப்பின் வகையைக் கண்டறிந்தார். இதுவே, பெப்டைடு பிணைப்பு என அழைக்கப்பட்டது.
இந்த தொடக்கத்தைக் கொண்டு அவர் டைபெப்டைடுகள், டிரை பெப்டைடுகள், பிறகு பாலிபெப்டைடுகள் ஆகியவற்றை உருவாக்கினார். 

1901 ஆம் ஆண்டில் எர்னெசுட்டு போர்னியு உடன் இணைந்து கூட்டாக கிளைசைல் கிளைசின் என்ற டைபெப்டைடைக் கண்டுபிடித்தார். 

1890 ஆம் ஆண்டில், வினைவேதிமம் (substrate) மற்றும் நொதியம் (enzyme) இவற்றுக்கிடையேயான இடைவினையைக் கண்ணுறுவதற்கான ”பூட்டு-சாவி மாதிரி” என்ற கருத்தியலை முன்மொழிந்தார். 

பரிசுகள்:-

டேவி பதக்கம் (1890)

இராயல் சங்கத்தின் உறுப்பினர் (1899)[1]

வேதியியலில் நோபல் பரிசு (1902)

எலியட் கிரெசன் பதக்கம் (1913)

மறைவு:-

ஜூலை-15, 1919 அன்று 
பெர்லின், ஜெர்மனியில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.