ஜூலை-29. நவீன புள்ளியியலின் தந்தை என அழைக்கப்பட்டவர், ஃபிஷரின் கொள்கை மற்றும் ஃபிஷரின் தகவல்கள் உருவாக்கியவர்-சர் ரொனால்டு ஐல்மர் பிசர் (Sir Ronald Aylmer Fisher)ஆர். ஏ. பிசர், மறைந்த தினம்.
இன்று நினைவு நாள்:- ஜூலை-29.
நவீன புள்ளியியலின் தந்தை என அழைக்கப்பட்டவர்,
ஃபிஷரின் கொள்கை மற்றும் ஃபிஷரின்
தகவல்கள் உருவாக்கியவர்-சர் ரொனால்டு ஐல்மர் பிசர் (Sir Ronald Aylmer Fisher)ஆர். ஏ. பிசர், மறைந்த தினம்.
பிறப்பு:-
பிப்ரவரி-17, 1890 ஆம் ஆண்டு
கிழக்கு பிஞ்ச்லி, லண்டன், இங்கிலாந்தில் பிறந்தார்.
ஹாரோ பள்ளியில் தனது 14 வயதில் நுழைந்து கணிதத்தில் நீல்ட் பதக்கத்தை வென்றார். 1909 ஆம் ஆண்டில், கோன்வில்லி மற்றும் கேம்பிரிட்ஜ் கயஸ் கல்லூரியில் கணிதம் கற்க உதவித்தொகை பெற்றார். 1912 ஆம் ஆண்டில், வானியல் துறையில் முதலிடம் பெற்றார். பிறகு 1915 ஆம் ஆண்டில்
The evolution of sexual preference on sexual selection and mate choice என்ற நூலை வெளியிட்டார்.
பணிகள்:-
1915-1919 இடைப்பட்ட காலத்தில் அவர் கணித ஆசிரியராகவும், இயற்பியல் ஆசிரியராகவும் விளங்கினார்.
ஆராய்ச்சிகள்:-
இவர் மெண்டலின் விதிகள், இயற்கைத் தேர்வு ஆகியவற்றை இணைக்க கணிதத்தைப்பயன்படுத்தினார். இதன் மூலம் நவீன பரிணாமப் பகுப்பு எனப்படும் படிவளர்ச்சிக் கொள்கையின் புதிய டார்வினியத் தொகுப்பைக் கண்டுபிடிக்க முடிந்தது. இவர் ஆரம்ப காலத்தில் பிரபலமான இனவாக்க மேம்பாட்டு ஆய்வாளராக இருந்தார். பிழைக்கொள்கைகளில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். இதனால் அவர் புள்ளியியல் தொடர்பான கணக்குகளை சோதனை செய்ய நேரிட்டது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பரவல்படி பகுப்பாய்வு மற்றும் சமவாய்ப்புச்சோதனை மாதிரிகளை ஆராய்ந்தார்.
மக்கள் தொகை மரபியலின் மூன்று முக்கிய நிறுவனர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நூல்கள்:-
1918 ஆம் ஆண்டு, "The Correlation Between Relatives on the Supposition of Mendelian Inheritance", in which he introduced the term variance and proposed its formal analysis நூலை வெளியிட்டார்.
1925 ஆம் ஆண்டு, Statistical Methods for Research Workers என்ற நூலை வெளியிட்டார்.
இது புள்ளிவிவர முறைகள் குறித்த 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் முக்கிய புத்தகங்களில் ஒன்று ஆகும்.
விருதுகள்:-
வெல்டன் நினைவு பரிசு (1930),
ராயல் பதக்கம் (1938),
கை பதக்கம் (1946),
கோப்லி பதக்கம் (1955) போன்ற விருதுகளை பெற்றார்.
மறைவு:-
ஜூலை-29, 1962 ஆம் ஆண்டு, தனது 72 வது வயதில்,
அடிலெய்ட், தெற்கு ஆஸ்திரேலியாவில் மரணமடைந்தார்.
No comments: