Breaking

செப்டம்பர்-30. பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் (International Translation Day):-


இன்று சிறப்பு நாள்:- செப்டம்பர்-30.

பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் (International Translation Day):-

 ஆண்டுதோறும் விவிலிய மொழிபெயர்ப்பாளர் புனித ஜெரோமின் (கிபி 347-420) நினைவு நாளான செப்டம்பர் 30 ஆம் நாள் கொண்டாடப்படும் ஒர் சிறப்பு நாளாகும்.

ஜெரோம் மொழிபெயர்ப்புகளின் பாதுகாவலர் எனவும்  அழைக்கப்படுகிறார்.

1953 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பினால் இந்த சிறப்புத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1991 ஆம் ஆண்டில் இவ்வமைப்பு பல்வேறு நாடுகளிலும் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளோர் தம் ஒருமைப்பாட்டைக் காட்டும் முகமாக இந்நாளைப் பன்னாட்டு ரீதியில் கொண்டாட அழைப்பு விடுத்தது.

தமிழில் மொழிபெயர்ப்பு நூல்கள்:-

1990 களில் சில இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்களை தமிழக அரசு வெளியிட்டது. அதில் கலீல் கிப்ரான் எழுதிய தீர்க்கதரிசி, ஆலிவர் கோல்ட்ஸ்மித் எழுதியவேக்பீல்டு பாதிரியார் போன்ற சில ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.