செப்டம்பர்-30. மின்னணுக்கற்றை களின் இயல்பு மற்றும் பிரௌனியன் இயக்கம் பற்றி ஆராய்ச்சி செய்த,பிரெஞ்சு இயற்பியலாளர்-ஜீன் பாப்டிஸ்ட் பெர்ரின்(Jean Baptiste Perrin) பிறந்த தினம்.
இன்று பிறந்தநாள்:- செப்டம்பர்-30.
மின்னணுக்கற்றை
களின் இயல்பு மற்றும்
பிரௌனியன் இயக்கம் பற்றி ஆராய்ச்சி செய்த,பிரெஞ்சு இயற்பியலாளர்-ஜீன் பாப்டிஸ்ட் பெர்ரின்(Jean Baptiste Perrin) பிறந்த தினம்.
பிறப்பு:-
செப்டம்பர்-30, 1870 ஆம் ஆண்டு,
லீல், பிரான்சில் பிறந்தார். உள்ளூரிலுள்ள பொதுப்பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கினார். பின்னர் பாரிசில் 'லைசி ஜேன்சன் டி செய்லி' என்ற கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார்.
பணிகள்:-
1894-97 ஆண்டுகளில் பெரென் ஈகோல் நார்மலே என்ற இடத்தில் இயற்பியல் ஆய்வு உதவியாளராகச் பணிபுரிந்தார்.
கதிர்கள் குறித்த ஆய்வுகள்:-
எதிர்மின் கதிர்கள், X கதிர்கள் இவற்றைப் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். இதை ஆய்வறிக்கையாக செய்து இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றர். அப்பொழுது வெற்றிடக் குழாயில் மின்னிறக்கம் செய்யும்போது எதிர்மின் வாயிலிருந்து எதிர்மின் கதிர்கள் தோன்றுகின்றன என்பதை அறிவியலறிஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இக்கதிர்கள் எதிர்மின் துகள்களால் ஆனவை. அவை அலை வடிவாக வெளியிடப்படுகின்றன என்பதிலும் கருத்து வேறுபாடுகள் தோன்றின.
பிரௌனியன் இயக்கம்:-
1895 இல் ஆய்வுகளில், எதிர்மின் கதிர்கள் காந்தப்புலத்தில் விலகலடைகின்றன என்பது மிக முக்கியமான முடிவாகும். இவை எதிர் மின்தன்மை உடையவை. இத்துகள்களின் மின்னூட்டம்-நிறை இவற்றுக்குள்ள விகிதத்தைக் கண்டறிய முற்பட்டார். ஆனால் ஜெ. ஜெ. தாம்சன் இவருக்கு முன்னால் அதைக் கண்டறிந்தார். 1901-ல் இயல்வேதியலில்,
பிரௌனியன் இயக்கம் மற்றும் மூலக்கூறு பற்றி ஆய்வுகளை மேற்கொண்டார். 1928-ல் இராபர்ட் பிரௌன் என்பவர் நீரில் மூழ்கியுள்ள மகரந்தத்துகள்கள் தொடர்ந்து இங்குமங்குமாக ஒழுங்கின்றி இயங்குகின்றன என்று கூறினார்.
1905-ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இதற்கான விளக்கத்தை துகள்கற்றை இயற்பியலின் அடிப்படையில் தந்தார். 'நீர்மூலக்கூறுகளினால் இத்துகள்கள் இயக்கப்படுகின்றன. ஒரு துகளினால் கடத்தப்படும் தூரம், அவற்றிற்கு இடைப்பட்ட நேரத்தின் வர்க்கத்திற்கேற்ப அதிகரிக்கிறது. எனக் குறிப்பிட்டார். வெப்பநிலை, துகள்களின் அளவு, இயங்குகின்ற திரவம் இவற்றில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் துகள்கள் எவ்வாறு இயங்குகின்றது என்பதை ஐன்ஸ்டீன் தெளிவாக விளக்கினார். 1908-ல் ஐன்ஸ்டீனின் கருத்துகளை ஆய்வுகளின் மூலம் உறுதி செய்து வெளியிட்டார்.
நூல்கள்:-
1913-ல் அணுக்கள் என்ற தலைப்பில் இவர் ஒரு நூலை வெளியிட்டார்.
விருதுகள்:-
1896-ல் ராயல் கழகத்தின் ஜூல் பரிசு,
1911-ல் ராயல் கழகத்தால் மத்யூக்கி பதக்கம்,
1912-ல் போலோக்னாவின் வல்லௌரி(Vallauri) பரிசு
1914-ல் பாரிசின் அறிவியல் கழகத்தினால் லா கேசு (La Caze)பரிசு,
1926-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மறைவு:-
ஏப்ரல்-17, 1942 ஆம் ஆண்டு,
நியூயார்க்கில் மரணமடைந்தார்.


No comments: