அக்டோபர்-20. நியூட்ரான் கண்டுபிடித்தவர், மன்ஹாட்டன் திட்ட விஞ்ஞானி- சர் ஜேம்ஸ் சாட்விக் (James Chadwick) பிறந்த தினம்.
இன்று பிறந்த நாள்:- அக் டோபர்-20.
நியூட்ரான் கண்டுபிடித்தவர்,
மன்ஹாட்டன் திட்ட விஞ்ஞானி-
சர் ஜேம்ஸ் சாட்விக் (James Chadwick) பிறந்த தினம்.
பிறப்பு:-
அக்டோபர்- 20, 1891 ஆம் ஆண்டு
பொலிங்டன், செஷயர், இங்கிலாந்தில் பிறந்தார்.
இவர் பொலிங்டன் குரொஸ் சர்ச் ஒஃப் இங்கிலாந்து ஆரம்பப் பாடசாலையிலும் மான்செஸ்டரிலுள்ள ஆண்களுக்கான இலக்கணப் பாடசாலையிலும் கல்வி கற்றார். மான்செஸ்டரிலுள்ள விக்டோரியாப் பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் கல்வி கற்றார்.
1913 ல், பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஹான்ஸ் கெய்கர் மற்றும் ஏர்னஸ்ட் ரூதர்போர்டின் கீழ் ஆய்வுகள் மேற்கொண்டார்.
ஆராய்ச்சிகள்:-
ஆய்வுகூடத்தை அமைத்து சாள்ஸ் D. எல்லிசின் உதவியுடன் பாஸ்பரஸ் அயணியாக்கம் பற்றியும், கார்பன் மோனாக்சைடு மற்றும் குளோரின் ஒளி வேதியியல்
வினைகள் பற்றியும் ஆய்வுகளை மேற்கொண்டார்.
1932 ல் இவர், அணுக்கருவில் அறியப்படாத நியூட்ரான் பற்றிய கண்டுபிடிப்புகள் மற்றும்
விளக்கங்களை வெளியிட்டார்.
சாட்விக்கின் இந்தக் கண்டுபிடிப்பு யுரேனியம் - 235 ன் கருப்பிளவைப் அறிய மிகவும் உதவிகரமாக இருந்தது.
மேலும் இந்தக் கண்டுபிடிப்பினால் ஆய்வுகூடங்களில், யுரேனியத்திலும் பாரமான மூலகங்களை உருவாக்கக்கூடியதாக இருந்தது. மேலும் பீட்டா சிதைவினால் உருவாகும் நியூட்ரான்களை மோதச் செய்வதன் மூலம் இது சாத்தியமானது.
பதவிகள்:-
1935ல், சட்விக் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் பௌதிகவியலுக்கான பேராசிரியர் ஆனார்.
1940ல் அணுகுண்டைத் தயாரிக்க ஆணையிடும் ஃப்ரிச் பியேல்ஸ் MAUD குழுவில் நியமிக்கப்பட்டார்.
ஐக்கிய அமெரிக்காவின் மன்காட்டன் திட்டத்தில் இணைந்து இரு அணுகுண்டுகள் தயாரிக்க உதவினார்.
விருதுகள்:-
ராயல் சொசைட்டி (1927),
ஹியூக்ஸ் பதக்கம் (1932),
இயற்பியல் நோபல் பரிசு (1935),
நைட் பேகலர் (1945),
மெல்ச்செட் பதக்கம் (1946),
கோப்ளி மெடல் (1950),
ஃபாரடே பதக்கம் (1950),
ஃப்ராங்க்லின் மெடல் (1951),
குத்ரி பதக்கம் மற்றும் பரிசு (1967) போன்ற விருதுகளை பெற்றார்.
இறப்பு:-
பிரிட்டன் இயற்பியலாளர்,
இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற இவர்,ஜூலை-24 ஆம் தேதி, 1974 ஆம் ஆண்டு தனது 82 வது வயதில் கேம்பிரிட்ஜ், இங்கிலாந்தில் மரணமடைந்தார்.


No comments: