Breaking

அக்டோபர்-22. கணிதத்தில் எண் கோட்பாட்டில் இருபதாவது நூற்றாண்டில் நூற்றுக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் எழுதி சாதனை புரிந்த இந்திய-அமெரிக்க கணிதவியலாளர்- சர்வதமன் டி. எஸ். சௌலா (Sarvadaman D. S. Chowla) பிறந்த தினம்.


இன்று பிறந்தநாள்:- அக்டோபர்-22.

கணிதத்தில் எண் கோட்பாட்டில் இருபதாவது நூற்றாண்டில் நூற்றுக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் எழுதி சாதனை புரிந்த இந்திய-அமெரிக்க கணிதவியலாளர்-
சர்வதமன் டி. எஸ். சௌலா (Sarvadaman D. S. Chowla) பிறந்த தினம்.



பிறப்பு:-

அக்டோபர்- 22, 1907 ஆம் ஆண்டு, லண்டன் இங்கிலாந்தில் பிறந்தார்.
சிறுவயதிலேயே சர்வதமன் கணிதத்தில் சிறந்து விளங்கினார். கல்லூரியில் இளநிலை வகுப்பில் படிக்கும்போதே இந்தியக் கணிதக்கழக ஆய்வுப் பத்திரிகையின் (Journal of the Indian Mathematical Society) கணக்குகள் பிரிவுக்கு பல கணக்குகள் வழங்கி வந்தார்.
1928 இல் லாஹூர் அரசுக்கல்லூரியில் முதுகலைப்பட்டம் பெற்றார். 1929 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்த்து பயின்றார்.
பல்வேறு சூழ்நிலைகளை சமாளித்து, தனது ஆராய்ச்சிகளை சிறப்பாக செய்தார்.
பிறகு பேராசிரியர் ஜே. ஈ. லிட்டில்வுட்டின் இயக்கத்தின் கீழ் Analytic Theory of Numbers என்ற பிரிவில் ஆய்வுக்கட்டுரை எழுதி 1931 இல் முனைவர் பட்டம் பெற்றார்.


பணிகள்:-

1931-32 செயிண்ட் ஸ்டீஃபன் கல்லூரி, டில்லி,
1932-33 வாராணசி இந்து பல்கலைக்கழகம்,
1933-36 ஆந்திரா பல்கலைக்கழகம், வால்டேர், இக்காலகட்டத்திலேயே அவர் இந்தியாவின் சிறந்த கணித வல்லுனர்களில ஒருவராக எண்ணப்படத் தொடங்கினார்.
1963 - 76 பேராசிரியர், பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் பணியாற்றினார்.

இவருடைய ஆய்வுகளால் சிறப்புபெற்ற கணித வகைப்பாடுகளின் பட்டியல்:

எண் கோட்பாடு (வாரிங் பிரச்சினை, எண்),
ரீமான் ஜீட்டா சார்பு,
இருபடிய அமைப்புகள்,
பெர்னோவிலி எண்கள்,
டயோஃபாண்டஸ் சமன்பாடுகள்,
லாடின் சதுரங்கள், முதலியவை ஆகும்.

நூல்கள்:-

The Riemann Hypothesis and Hilberts Tenth Problem. 

விருதுகள்:-

பத்மபூஷன் விருது, இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் உறுப்பினர்.

மறைவு:-

டிசம்பர்-10, 1995 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் மரணமடைந்தார்.

சிறப்புகள்:-

ஏறத்தாழ 350 ஆய்வுக் கட்டுரைகள் 1417 பக்கங்கள் கொண்ட புத்தகமாகப் வெளியிடப்பட்டன.

No comments:

Powered by Blogger.