அக்டோபர்-22. உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம்.
இன்று சிறப்பு நாள்:-
அக்டோபர்-22.
உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம்.
உலகில் சுமார் 70மில்லியன் மக்கள் இந்தக் குறைபாட்டுடன் உள்ளனர். இந்தியாவில் மட்டும் 12 மில்லியன் மக்கள் திக்குவதாக இந்திய திக்குவாய் சங்கம் ஒரு புள்ளிவிவரத்தில் குறிப்பிட்டுள்ளது.
இவர்களுக்காக நாம் அனைவரிம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். உதவி செய்யாவிடினும், கேலி செய்யாமல் இருப்போம்.
ஒருவர் கூற வரும் கருத்தை விட அதை எவ்விதம் கூறுகிறார் என்பதைக் கூர்ந்து கவனிக்கும் உலகத்தில் தான் நாம் இன்று வாழ்ந்து வருகிறோம். ஒருவர் உளவியல் ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ தான் கூற வேண்டிய வார்த்தைகளை விழுங்கியோ, திக்கியோ சொல்வதை இனியேனும் கேலி செய்யாமல் இருப்போம் அவர்கள் எப்படி சொல்கிறார்கள் எனபதை விடுத்து என்ன சொல்கிறார்கள் என கவனிப்போம்.
திக்குவாய் பிரச்சினை கொண்டு அதைக் கடந்து புகழ்பெற்றவர் அறிவியல் அறிஞர், கண்டுபிடிப்பாளர் ஐசக் நியூட்டன் ..திக்குவாயினால் சிறு வயதில் பாதிக்கப்பட்ட கால்ஃப் வீரர் டைகர் உட்ஸ், இன்று அதற்கான சிகிச்சை அளிக்கும் விழிப்புணர்வு அளிக்கும் ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.


No comments: