Breaking

அக்டோபர்-22. வைட்டமின்-சி (VITAMIN-C), செல்கள், அஸ்கார்பிக் அமிலத்தின் வேதியியல் மாற்றங்கள் குறித்து கண்டுபிடித்த ஹங்கேரி ஆராய்ச்சியாளர்- ஆல்பர்ட் ஸென்ட் ஜர்ஜி (Albert Szent Gyorgyi) மறைந்த தினம்.

இன்று நினைவு நாள்:- அக்டோபர்-22.

வைட்டமின்-சி (VITAMIN-C),
செல்கள், அஸ்கார்பிக் அமிலத்தின் வேதியியல் மாற்றங்கள் குறித்து கண்டுபிடித்த ஹங்கேரி ஆராய்ச்சியாளர்- ஆல்பர்ட் ஸென்ட் ஜர்ஜி (Albert Szent Gyorgyi) மறைந்த தினம்.

பிறப்பு:-

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில்,
செப்டம்பர்-16,1893 ஆம் ஆண்டு
பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு,
1911 ஆம் ஆண்டில் செம்மெல்விஸ் பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடங்கினார்.  பின்னர் தன் மாமாவின் உடற்கூறியல் ஆய்வகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள பணிபுரிந்தார். 
பின்னர் அவர் மருத்துவ கல்வி படித்து  MD  பட்டம் 1917 இல் பெற்றார். 
பிறகு 1927 ஆம் ஆண்டில் கேட்ரிட்ஜ், பிட்ஸ்விளையாம் கல்லூரியில் இருந்து Ph.D பட்டம் பெற ஒரு கரிம அமிலத்தை பிரித்தெடுக்கும் பணியை மேற்கொண்டார். பிறகு அட்ரீனல் சுரப்பி திசுக்களிலிருந்து "ஹெக்சுரோனிக் அமிலம்" என்று அழைத்தார்.

பணிகள்:-

1920 முதல் 1926 வரை பல அறிவியல் அமைப்புகளில் பணியாற்றினார். 
1927-ல் ராக்ஃபெல்லர் ஃபெல்லோவாக கேம்பிரிட்ஜ் சென்றார். 1928 முதல் 1933 வரை பல்வேறு ஆய்வுக் குழுக்களுடன் இணைந்து பணிபுரிந்தார். தனிப்பட்ட முறையிலும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.
மீண்டும் கேம்பிரிட்ஜ் திரும்பினார். ஸெஜ்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவ வேதியியல், கரிம வேதியியல் துறைத் தலைவராகவும், பின்னர் புடாபெஸ்ட்டில் மருத்துவ வேதியியல் துறைத் தலைவராகவும் பணியாற்றினார். 

ஆராய்ச்சிகள்:-

உயிரணு ஆற்றல் பரிமாற்றம், உயிரணு சுவாசம் குறித்து ஆராய்ந்தார்.
ஆக்ஸிஜன் ஹைட்ரஜன் சார்புத்தன்மை குறித்து விளக்கினார். இது உயிரினங்களின் உயிரணுக்களில் நிகழும் வளர்சிதை மாற்றத் தாக்கங்கள், செயல்முறைகள் பற்றியது.
சிறுநீரக சுரப்பிகளில் இருந்து எல்.அஸ்கார்பிக் அமிலம் அல்லது வைட்டமின் சி-யை பிரித்தெடுத்தார். 

வைட்டமின் சி மற்றும் ஃப்யூமரிக் அமிலத்தின் வினைவேக மாற்றத்துடன் கூடிய வினைகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.

சிட்ரிக் அமிலத்தின் சுழற்சி, பல கூறுகள், பிரதிபலிப்புகள் குறித்தும் கண்டறிந்தார். 

உயிரியல் ஆக்சிஜனேற்றம் குறித்து தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொண்டார்.

ஹங்கேரியில் இருந்து 1947-ல் வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார். மசாசூசெட்ஸில் உட்ஸ்ஹோல் என்ற இடத்தில் தசை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி இயக்குநராகப் பதவி ஏற்றார். தசைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வைத் தொடங்கினார். இந்த ஆராய்ச்சி முடிவுகள், அடுத்தடுத்து பல ஆராய்ச்சிகளுக்கு வழிவகுத்தன.

புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிகளில் இவருக்கு 1950 இல் ஆர்வம் ஏற்பட்டது. குவான்டம் இயக்கவியல் கோட்பாடுகளை புற்றுநோய் உயிர் வேதியியலுக்குப் பயன்படுத்துவது குறித்து ஆராயத் தொடங்கினார். 

பதவிகள்:-

பல அறிவியல் சங்கங்களில் உறுப்பினராக இருந்தார்.
புடாபெஸ்ட் அறிவியல் அகாடமியின் தலைவராகவும், புடாபெஸ்ட் தேசிய அகாடமியின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.

விருதுகள்:-

செல்கள், வைட்டமின் சி, அஸ்கார்பிக் அமிலத்தின் வேதியியல் மாற்றங்கள் குறித்த கண்டுபிடிப்புகளுக்காக 1937-ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு,
கேமரான் பரிசு,
அடிப்படை மருத்துவம் ஆராய்ச்சிக்கான ஆல்பர்ட் லஸ்கர் விருது-(1954),
உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 

நூல்கள்:-

ஆக்ஸிடேஷன், க்ளெமெண்டேசன், வைட்டமின்கள், ஹெல்த் மற்றும் டிசைஸ் (1940),
பயோயெர்கெடிக்ஸ் (1957),
ஒரு மூலக்கூறு உயிரியல் அறிமுகம் (1960)
போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

இறப்பு:-

நோபல் பரிசு பெற்ற இவர்,
அக்டோபர்- 22, 1986 ஆம் ஆண்டு
மாசச்சூசெட்ஸ்,அமெரிக்காவில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.