Breaking

அக்டோபர்-26. காலரா மற்றும் பூபோனிக் பிளேக் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த இரஷ்ய பாக்டிரியாலஜிஸ்ட் -சர் வால்டர்மர் மோர்டெச்சாய் வோல்ஃப் ஹாஃப்கின் (Sir Waldemar Mordechai Wolff Haffkine) மறைந்த தினம்.

இன்று நினைவு நாள்:- அக்டோபர்-26.

காலரா மற்றும் பூபோனிக் பிளேக் நோய்க்கு  தடுப்பு மருந்து கண்டுபிடித்த இரஷ்ய பாக்டிரியாலஜிஸ்ட் -சர் வால்டர்மர் மோர்டெச்சாய் வோல்ஃப் ஹாஃப்கின்
(Sir Waldemar Mordechai Wolff Haffkine) மறைந்த தினம்.

பிறப்பு:-

ரஷ்யாவின் ஒடெஸா நகரில்,மார்ச்-15, 1860
ஆம் ஆண்டு பிறந்தார். பள்ளிப் படிப்புக்குப் பிறகு, ஒடெஸா பல்கலைக்கழகத்தில் இயற்பியல், கணிதம், விலங்கியல் கற்றார்.
அங்கு நுண்ணுயிரியல் நிபுணர் ஈலி மெச்னிகாஃப்பின் பணிகளால் ஈர்க்கப்பட்டார். அவருடன் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டார். பிறகு இயற்கை அறிவியலில் பட்டம் பெற்றார்.

பணிகள்:-

விலங்கியல் அருங்காட்சி யகத்தில் சிறிது காலம் பணியாற்றினார். படிப்புச் செலவுக்காக மாணவர்களுக்கு டியூஷன் வகுப்பு எடுத்தார்.
அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு,  ஆராய்ச்சிகள் குறித்து பல கட்டுரைகளை எழுதினார். 
பிறகு, 1888 ஆம் ஆண்டு பாரிஸில் உள்ள ஜெனீவா மருத்துவக் கல்லூரியில் துணை விரிவுரையாளராக பணிபுரிந்தார்.

ஆராய்ச்சிகள்:-

பாஸ்டர் சோதனைக் கூடத்தில் நடந்துவந்த நோய்த் தடுப்பு ஆராய்ச்சிக் களத்தில் இணைந்தார். காலரா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டார்.
அதை விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதித்ததில், வெற்றி கிடைத்தது.
1892 ஆம் ஆண்டு ஜூலை-18 ஆம் நாள் 
தனக்குத் தானே செலுத்தி, முதன்முதலாக மனித சோதனையை நிகழ்த்தினார். பின்னர், ஜூலை 30 ஆம் தேதி தனது உயிரியியல் சங்கத்திற்கு தனது கண்டுபிடிப்பை அறிக்கை செய்தார்.
அப்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் காலரா நோய் வேகமாகப் பரவியது. இதனால் பிரான்ஸில் இருந்த, இந்தியாவின் முன்னாள் வைஸ்ராய் டஃபின், இவரது தடுப்பூசி மருந்து குறித்து கேள்விப்பட்டு, இவரை இந்தியாவுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, கல்கத்தாவில் இந்த மருந்தை அறிமுகம் செய்தார். பின்னர் இந்தத் தடுப்பூசி பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
பாரிஸ் திரும்பி, ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். 1896 ஆம் ஆண்டு, பம்பாயில் பிளேக் நோய் தாக்கியபோது, பிரிட்டிஷ் அரசின் அழைப்பை ஏற்று பம்பாய் வந்தார். கிராண்ட் மெடிக்கல் கல்லூரி ஆய்வுக்கூடத்தைப் பயன்படுத்தி பிளேக் தடுப்பு மற்றும் குணப்படுத்தும் முறைகளைக் கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். முதலில் தாமாக முன்வருபவர்களுக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டது. 
இதனால் பெரும் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன.

 மறைவு:-

இறுதிவரை நோய்த்தடுப்பு நடவடிக்கைகளிலும் நோயைக் குணப்படுத்தும் ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்ட இவர், அக்டோபர்-26, 1930 ஆம் ஆண்டு,
லாசேன், சுவிட்சர்லாந்தில் மரணமடைந்தார்.

சிறப்புகள்:-

மும்பை பிளேக் சோதனைக் கூடத்துக்கு இவரது பெயர் சூட்டி சிறப்பிக்கப்பட்டது.
மேலும், இங்கிலாந்தைச் சேர்ந்த தலைசிறந்த விஞ்ஞானி ஜோசப் லிஸ்டர் இவரை ‘மனிதகுலக் காப்பாளர்’ எனப் போற்றினார்.

No comments:

Powered by Blogger.