Breaking

அக்டோபர்:-29. அறிவியல் அறிஞர், நூலாசிரியர், புதின நாடக எழுத்தாளர், மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு உதவும் கருத்தடை மாத்திரைகள் உருவாக்கியவர்- காரல் ஜெராசி (Carl Djerassi) பிறந்த தினம்.


இன்று பிறந்த நாள் அக்டோபர்:-29.

அறிவியல் அறிஞர், நூலாசிரியர், புதின நாடக எழுத்தாளர், மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு உதவும் கருத்தடை மாத்திரைகள் உருவாக்கியவர்- காரல் ஜெராசி (Carl Djerassi) பிறந்த தினம்.


பிறப்பு:-

அக்டோபர்-29, 1923 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவில் பிறந்தார்.
இவருடைய பெற்றோர் இருவரும் மருத்துவர்கள். ஆத்திரியா நாட்டின் வியன்னாவில் உள்ள பள்ளிகளில் தொடக்கக் கல்வியைப் படித்தார். தமது பதினாறாம் வயதில் அமெரிக்காவுக்கு வந்தார். மிசூரியில் உள்ள கல்லூரியில் வேதியியல் பயின்று பட்டம் பெற்றார். ஒக்கியோவில் உள்ள கென்யான் கல்லூரியில் படித்தார்.

கண்டுபிடிப்புகள்:-

இவரது தலைமையில் ஆய்வுக் குழு 1951 இல் நாரத் ரின்ரோன் என்னும் மூலக்கூறு ஒன்றைக் கண்டுபிடித்தது.  அம்மூலக்கூறு அடிப்படையாகக் கொண்டு குடும்பக் கட்டுப்பாட்டுக்குத் தேவையான மாத்திரைகளை உருவாக்கினார்கள், தம் வாழ்க்கை முழுதும் ஆராய்ச்சியிலேயே ஈடுபட்டார். 

பணிகள்:-

வேதியியல் நிறுவனங்களிலும் மருந்துகள் உருவாக்கும் குழுமங்களிலும்  வேலை செய்தார். உலகப் புகழ் பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக் கழக வேதியியல் துறையின் மதிப்புமிகு பேராசிரியராக இருந்தார். கரிம வேதியியல் துறைக்குப் பெரும் பங்களிப்பு செய்துள்ளார் 

நூல்கள்:-

1200 ஆய்வுக் கட்டுரைகள் அறிவியல் புதினங்கள், நாடகங்கள் ஆகியன படைத்துள்ளார். இவருடைய தன் வரலாறு 4 மடலங்களில் எழுதப் பட்டு வெளியாகியது.

விருதுகள்:-

 இவருடைய சாதனைகளைப் பாராட்டி பல அமைப்புகள் விருதுகள்  வழங்கின.

மறைவு:-

ஜனவரி-30, 2015 ஆம் ஆண்டு
சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்காவில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.