Breaking

அக்டோபர்-29. உலக ப‌க்கவாத ‌தினம் (World Stroke Day)


இன்று சிறப்பு நாள்:- அக்டோபர்-29.

உலக ப‌க்கவாத ‌தினம்(World Stroke Day) 

ஒவ்வொரு ஆண்டும்  பக்கவாத நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. பக்கவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-29-ம் நாளை  உலக ப‌க்கவாத ‌தினம் என்று எல்லா நாடுகளும் அனுசரித்து வருகின்றன. அதன்படி பக்கவாதம்குறித்த விழிப்பு உணர்வை எல்லோரும் பெற்று நலம் பெற இன்றைய நாள் ஏதுவாக உதவுகிறது. 


பக்கவாதம்:-

மனிதனுக்கு உண்டாகும் நோய்களில் ஆபத்தானது. ரத்த நாளங்களில் அடைப்பு உண்டாகி, மூளையின் பாகங்கள் செயல் இழப்பது பக்கவாதம் ஆகும்.

எந்தவித முன் அறிகுறியும் இல்லாமல் வரக்கூடிய ஆபத்தான நோய் ஆகும். இதை ஸ்ட்ரோக் என்றும் கூறுவார்கள். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத் தடை, ரத்தக் கசிவு போன்ற காரணங்களால் பக்கவாதம் ஏற்படுகிறது.

இதனால் உடலின் பாகங்கள் செயல்பாட்டை இழந்து அசைவின்றி போய்விடுகிறது. 

அதிக அளவு ரத்த அழுத்தம், தேவையற்ற கொழுப்பு பொருள்கள் உடலில் தேங்குவது போன்றவை தான் பக்கவாதம் வர துணை புரிகிறது.  

மரபுரீதியாக கூட இந்த பக்கவாத நோய் அதிகம் உண்டாகிறது என்கிறார்கள். 

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் சுமார் 6 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். 

அவர்களில் சுமார் 1.40 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். 

உலகம் முழுவதும் சுமார் 8 கோடிப் பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

5 கோடிப் பேர் நிரந்தரமாக ஊனமடைந்து வாழ்ந்து வருகிறார்கள்.  

ஒவ்வொரு 6  விநாடிகளுக்கும் புதிதாக பக்கவாத நோயாளி உருவாவதாகச் சொல்கிறது உலகச்
சுகாதார நிறுவனம்.


அறிகுறிகள்:-

தலைவலி, பார்வை மங்குதல், திடீர் மயக்கம், கை, கால்களில் தளர்ச்சி, உணர்ச்சிக் குறைவு, மரத்துப் போதல், பேச்சுக்குழறல் போன்றவை இந்த நோய் தாக்குவதைக் காட்டும் உடனடி அறிகுறியாகும். 

ரத்த அழுத்தத்தை சீராக வைத்தல், உடற்பயிற்சி, சீரான உணவு, சந்தோஷமான சூழல், புகை, மது ஒழித்தல் போன்றவை இந்த நோயை வரவிடாமல் பாதுகாக்கும். மேலும், இதய நாள நோய், சர்க்கரை குறைபாடு கொண்டவர்களைப் பக்கவாதம் தாக்குவது அதிகம். 

சிகிச்சைகள்:-

 
பக்கவாதம் ஏற்படும்போது உடனடியாக சிகிச்சை மேற்கொள்வதன் மூலம், மூளைத் திசுக்கள் பாதிப்படைவதைக் குறைத்துவிடலாம். இதனால் ஏற்படும் ஊனத்தையும் குறைக்கலாம். பக்கவாதம் ஏற்பட்டவர்களில் 50 முதல் 70 சதவீதத்தினர் தாங்களாகவே தங்கள் தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் நிலைக்கு நிச்சயம் திரும்ப முடியும். ஆனால், 15 முதல் 30 சதவீதத்தினர் படுத்த படுக்கையாகி, நிரந்தரமான ஊன நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். இவர்களைப் பராமரிப்பதில் மிகுந்த கவனமும் குடும்பத்தினரின் ஆதரவும் மிகவும் தேவை.
குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் ஏற்பட்டிருந்தால், மற்றவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். குடும்பப் பாரம்பரியம் காரணமாகவோ மரபு ரீதியாகவோ இந்த நோய் வருகிறது. வயது அதிகரிக்கும்போது, பக்கவாதத்தால் ஏற்படும் பாதிப்பும் அதிகரித்துவிடுகிறது. குடும்ப வரலாறு, மரபியல் காரணங்களை மாற்ற முடியாது. ஆனால், மருந்துகள், வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வதன் மூலம் சில விஷயங்களைச் சரி செய்துகொள்ள முடியும்.

No comments:

Powered by Blogger.