இந்தியாவைக் கலக்கும் பெண் விஞ்ஞானிகள்!-மங்களா நார்லிகர்..
இந்தியாவைக் கலக்கும் பெண் விஞ்ஞானிகள்!-மங்களா நார்லிகர்..
இந்தியாவில் கடந்த பல வருடங்களாக ஏராளமான பெண்கள் அறிவியல் துறையில் தங்கள் பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர்.
மங்களா நார்லிகர்:-
இவர் ஒரு இந்திய கணித மேதை. மும்மை மற்றும் புனே பல்கலைக்கழகங்களில் கணிதவியல் துறையில் பெரும் பங்களிப்பை செலுத்தியிருப்பவர்.
இந்தியாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய கணிதவியல் ஆராய்ச்சியாளர்களில் மங்களாவும் ஒருவர்.
திருமணத்துக்கு பிறகு 16 வருடங்கள் கழித்து தனது பி.ஹெச்டி ஆராய்ச்சியை முடித்தவர்.
டாடா நிறுவனத்தின் அடிப்படை ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றியபோது, கணிதம் தொடர்பாக ஏராளமான புத்தகங்களை ஆங்கிலத்திலும் மராத்தியிலும் எழுதியவர் மங்களா நார்லிகர்.
மராத்தி புத்தகம் ஒன்றிற்காக விஷ்வநாத் பார்வதி கோகுலே விருதை வென்றவர்.
ஒரு ஆசிரியராக தனது மாணவர்களுக்கு கணிதத்தை எளிய முறையில் கற்பிப்பதற்கு பெயர் பெற்றவர்.


No comments: