நவம்பர்-08. பன்னாட்டுக் கதிரியல் நாள் (International Day of Radiology).
இன்று சிறப்பு நாள்:-நவம்பர்-08.
பன்னாட்டுக் கதிரியல் நாள் (International Day of Radiology).
இன்றைய நவீன மருத்துவத் துறையில்
மருத்துவப் படிமவியலின்
சிறப்பினை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும்.
எக்சு-கதிர்கள்
கண்டுபிடிக்கப்பட்ட நவம்பர்-08 ஆம் நாள் இது கொண்டாடப்படுகிறது.
கதிரியலுக்கான ஐரோப்பியக் கழகம், மற்றும் கதிரியலுக்கான அமெரிக்கக் கல்லூரி ஆகியன இணைந்து 2012 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்நாளை அறிமுகப்படுத்தின.
ஜெர்மானிய இயற்பியலாளர், வில்கெல்ம் இராண்ட்ஜன் (1845-1923), 1895 ஆம் ஆண்டு நவம்பர்-08 ஆம் தேதி எக்சு கதிர்களை கண்டுபிடித்தார்.
அதற்காக அவர் இயற்பியலுக்கான நோபல் பரிசினை 1901-ல் பெற்றார்.
இது தான் இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு ஆகும்.
அனைத்துத் துறைகளிலும் அதிலும் சிறப்பாக மருத்துவத் துறையிலும் பெரும் புரட்சியினை இக்கதிர்கள் ஏற்படுத்தின.
அவரது பங்களிப்பினை போற்றும் வகையில் அணு எண் 111 கொண்ட தனிமம் இராண்ட்ஜனியம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
No comments: