Breaking

நவம்பர்-14 முதல் 20 ஆம் தேதி வரை.. தேசிய நிலவளப் பாதுகாப்பு வாரம்..


நவம்பர்-14 முதல் 20 ஆம் தேதி வரை..
தேசிய நிலவளப் பாதுகாப்பு வாரம்..

வாழ்க்கை ஆதரமான நிலம் நம்மிடம் குறைவாகவே உள்ளது. உலகின் நிலப்பரப்பில் பெரிதும் மணல் பாலைவனங்களே உள்ளது. 

நிலப்பரப்பில் முன்றில் ஒரு பங்கு வறண்ட அல்லது மித வறண்ட நிலமாகவும்,  11% நிரந்தரமான பணியின் கீழ் உள்ளது, மீதம் 10% துருவப்பகுதியில் கிடக்கிறது.

நம்  இந்தியா உலகின் ஏழாவது மிகப்பெரிய நாடு. 3,214 கீ.மீ கிழக்கிலிருந்து மேற்கும் மற்றும் 2,443 கீ.மீ வடக்கிலிருந்து தெற்கும் பரவியுள்ளது.

மொத்த புவியியல் பகுதி 328.73 மில்லியன் ஹெக்டேர் ஆகும். இந்திய கடலோர தீபகற்ப இந்தியா 7,517 கீ.மி கிழக்கிலிருந்து மேற்கு நீண்டுள்ளது.

நிலம் நம் வாழ்வாதாரம் ஆனால் தற்போது அது பல்வேறு சீரழிவை சந்தித்து வருகிறது, வீடுகள், சாலைகள் , தொழிற்சாலைகள்,சுரங்க வேலை, விவசாயம், மற்றும் மேய்ச்சலுக்காக நிலம் அழிக்கப்படுகிறது. இதனால் மண்அரிப்பு, வெள்ளம் , வறட்சி மற்றும் மாசுபாடு ஏற்படுகிறது.

இரசாயண உரங்கள் மற்றும் நிலத்தடி நீர் வளமும் பூச்சிக் கொல்லிகளின் மிகுதியான நிலவளம் கெடுகிறது. இதனால் மனித நலம் மற்றும் நிலத்தின் உற்பத்தித் திறனும் பாதிக்கிறது இதனால் மனித நலமும் கெடுகிறது.

உரங்கள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிரது. இதனால் மண் மற்றும் நில மாசுபாடு ஏற்படுகிறது.

இந்தியாவில் காடுகள் வேகமாக அழிந்து வருகின்றது. 21.05% காடுகளை இந்தியா கொண்டுள்ளது. காடுகளும் புல் வெளிகளும் நிலத்தின் உறுதிக்கு துணைபுரிகின்றன. எனவே ,நீர் , மண் , வளர்ச்சி மற்றும் பல்லுயிர் பாதுகாப்பிற்க்கு உதவுகிறது. நிலத்தை மண் அரிப்பு , வெள்ளம் , நிலச்சரிவு போன்றவற்றில்  இருந்து பாதுகாகிறது.

நிலம் வரையறுக்கப்பட்ட , குறைவான ஆதாரம் நாம் நலத்தையும் இயற்கையும் பராமரிக்க வேண்டும்.

அணைகட்டுதல் , குளங்கள் சரிபார்த்தல் , மற்றும் து£ர்வாறுதலால் தண்ணீரரை சேமிக்கலாம்.

நிலத்தை பாதுகாக்கவில்லை என்றால் உணவு உற்பத்தி பாதிக்கப்படும் உண்ண உணவு இல்லையேல் தொழிற் நுட்பத்தால் பலன் ஏது.

நிலப்பாதுகாப்பிற்கான தீர்வுகள் எளிதானவை அல்ல. எனவே ஒவ்வொரும் முயன்று தீர்வுகள் காணவேண்டும்.

மரம் நடுவதிலும் நிலப்பாதுகாப்பிலும் உள்ளுர் மக்களை ஈடுபட செய்தல்
மரத்தேவையை குறைத்து அதற்கு பதிலாக பயன்படுத்த வேண்டும்.

மரங்களை நீர்பிடிப்பு பகுதியிலும் நீர் பரப்புகளில் வளர்க்கலாம். இதனால் மழை நீர் சேகரித்தால்  நீர் ஊற்றுகள்  பெறுகும்.
கிராம அளவில் பள்ளிகளிலும் வீடுகளிலும் , மரம் வளர்த்தலை ஊக்குவிக்க வேண்டும்.

உரங்கள் மற்றும் நுண் ஊட்டசத்துக்களை சரியான அளவே பயன்படுத்த வேண்டும். அதிகமான இரசாயன உரங்களால் மண் வளம் குறைந்து விவாசாயத்தை குறைக்கிறது.

மண்வளத்தை பாதுகாக்க கலாச்சார முறையில் உயிர் உரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

கால்நடைகள் மேய்ச்சலை சரிபார்க்க வேண்டும்
சரியான முறையில் நிலத்தை பயன்படுத்துதல்
தொழிற்சாலைகளான வெப்பசக்தி நிலையங்கள், அணைகட்டுகள் போன்றவை விவசாய நிலத்திற்கு அருகே இருத்தலை தடுக்கவும்.

திட்டமிடப்படாத நகர்புற வளர்ச்சியை சரிபார்க்க வேண்டும்.

கிராமப் புறங்களில் சிறு குழுக்களை உருவாக்கி வளர்ச்சித்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Powered by Blogger.