Breaking

நவம்பர்-14. மலர்களின் நாயகன், இந்திய தொல் தாவரவியலாளர்-பீர்பால் சகானி (Birbal Sahni) பிறந்த தினம்.


இன்று பிறந்த நாள்:- நவம்பர்-14.

மலர்களின் நாயகன்,
இந்திய தொல் தாவரவியலாளர்-பீர்பால் சகானி (Birbal Sahni) பிறந்த தினம்.

பிறப்பு:-

1891 ஆம் ஆண்டு நவம்பர்-14 அன்று மேற்கு பஞ்சாபின் சாகாப்பூர் மாவட்டத்திலுள்ள பேரா நகரத்தில் பிறந்தார்.
லாகூரிலுள்ள அரசு கல்லூரி பல்கலைக்கழகத்திலும், பஞ்சாப் பல்கலைக்கழகத்திலும்  ஆரம்பகால உயர் கல்வியைக் கற்றார். இந்திய பிரயோபைட்டியலின் தந்தையாகக் கருதப்படும் சிவ் ராம் காசியப்பிடம்  தாவரவியலைக் கற்றார். 1914 ஆம் ஆண்டு கேம்பிரிட்ச்சு இமானுவேல் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1919 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் ஆல்பர்ட்டு சார்லசு சீவார்டின் வழிகாட்டுதலில் அறிவியல் முனைவராக பட்டம் பெற்றார்.

பணிகள்:-

1919 இல் மியூனிச்சில் செருமனிய தாவர அமைப்பியல் விஞ்ஞானியான காரல் ரிட்டர் வோன் கோய்பெல்லுடன் இணைந்து பணியாற்றினார். 

இந்தியாவிற்குத் திரும்பி வாரணாசியில் உள்ள பனாரசு இந்து பல்கலைக்கழகம் மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தாவரவியல் பேராசிரியராக  பணியாற்றினார்.1921 ஆம் ஆண்டு லக்னோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.
இவருடைய ஆய்வுகளை கேம்பிரிட்ச்சு பல்கலைக்கழகம் அங்கீகரித்து 1929 ஆம் ஆண்டு இவருக்கு அறிவியல் முனைவர் பட்டத்தை வழங்கியது. 

ஆய்வுகள்:-

இந்திய துணைக் கண்டத்தின் புதைபடிவங்களைப் பற்றி இவர் ஆய்வு செய்தார். 

இந்தியாவின் புதைபடிவ தாவரங்கள் பற்றிய ஆய்வு மற்றும் தாவரங்களின் பரிணாம வளர்ச்சியில் ஆய்வு ஆகியன சகானியின் முக்கிய பங்களிப்புகள் ஆகும். 
இந்தியாவில் கோண்டுவானா பகுதியில் புதியவகை செடியை ஆய்வு செய்து ப்ளாரா வகை எனக்கூறினார். சுமார் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த செடிவகையை ஆராய்ந்து விளக்கினார்.

ஆதியில் ஒன்றாக இருந்த கண்டங்கள் எதனால் எப்படி விலகின என்பதை ஆராய்ந்து கூறினார். பாறைகளின் வயதை ஆராய்ந்து அறிதியிட்டு கூறியதை கண்டு புவியியல் மேதைகள் இவரை கண்டு பாராட்டினர். தாவரவியலுக்கும், உயிரியலுக்கும் தனித்தனி கல்வி அமைப்புகளை ஏற்படுத்தினார். 
இந்திய விஞ்ஞானக் கல்வியின் உருவாக்கத்திலும் சகானி ஈடுபட்டார்.

சாதனைகள்:-

வில்லியம்
சோனியா சீவார்டி என்று சகானி பெயரிட்ட டிரையாசிக் காலத்தைச் சேர்ந்த பென்னெட்டிடேலியன் தாவரம் இந்தியத் தொல்லுயிர் தாவரங்களின் பட்டியலில் 1932 ஆம் ஆண்டு சேர்த்துக் கொள்ளப்பட்டது. பாடஞ்செய்யப்பட்ட புதிய வகை மரமான ஓமாக்சைலோன், சுராசிக் காலந்தொட்டு இருந்த விதையுறைத் தாவரத்துடன் ஒத்திருப்பதையும் சேர்த்துக் கொண்டது. அடுத்த வந்த ஆண்டுகளில் அவர் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார் என்பதோடு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தாவரவியலுக்கு அர்ப்பணித்த மாணவர்களின் குழுவைச் சேகரித்து, பல்கலைக்கழகத்திற்கு புகழைச் சேர்த்தார். அது விரைவில் இந்தியாவில் தாவரவியல் மற்றும் தொல்தாவரவியல் ஆய்வுகளுக்கான முதல் மையமாக அமைந்தது. 

இவர்  தொல் தாவரவியல் சங்கம் 1946 ஆம் ஆண்டு செப்டம்பர்-10 ஆம் தேதி தொல்தாவரவியல் நிறுவனத்தை தொடங்கியது. தொடக்கத்தில் லக்னோ பல்கலைக் கழகத்தின் தாவரவியல் துறையில் இந்நிறுவனம் செயல்பட்டது. பின்னர் 1949 ஆம் ஆண்டு தற்போதைய இருப்பிடமான 53 பல்கலைக்கழக சாலை லக்னோவிற்கு இடம்பெயர்ந்தது.
1936 ஆம் ஆண்டில் அரியானா மாநிலத்திலுள்ள கோக்ர கோட் என்ற தொல்லியல் தளத்தில் இருந்து எடுத்த சில நாணயங்களையும் அச்சுகளையும் ஆய்வு செய்த இவர் நாணயங்களை வார்த்து உருக்கொடுப்பதற்கு சாத்தியமான வழிமுறைகளைப் பற்றி எழுதினார். தேசிய அருங்காட்சியகம் தில்லியில் இவர் சேகரித்த நாணயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

விருதுகள்:-

இலண்டன் ராயல்
கழகத்தின் உறுப்பினர் பதவி வகித்தார்.
இந்தியாவின் தேசிய அறிவியல் அகாடமியின் தலைவராக இருந்தார். சுவீடன் நாட்டின் சிடாக்கோம் நகரிலுள்ள சர்வதேச தாவரவியல் காங்கிரசின் கெளரவ அதிபராக பணியாற்றினார்.

இறப்பு:-


நாணயவியல், படிமவியல், உயிரியல், மண்ணியல், தாவரவியல் என பல்வேறு துறைகளிலும் சாதனைப்படைத்தவர்,
கேம்பிரிட்ஜ்யில் தாவரவியலில் டி.எஸ்ஸி பட்டம் பெற்ற முதல் இந்தியரான
ஏப்ரல்-10, 1949 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.