நவம்பர்-14. உலக நீரிழிவு நாள்:- (World Diabetes Day)
05:09
Read
இன்று:- நவம்பர்-14.
உலக நீரிழிவு நாள்:-
(World Diabetes Day)
உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்-14 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் இத்தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தும்
இன்சுலின்
மருந்தினை சார்ள் பெஸ்ட் என்பவருடன் இணைந்து 1921 இல் பிரட்ரிக் பான்ரிங் என்பவர் கண்டுபிடித்தார். இவரது பிறந்த தின நினைவாகவே இன்றைய நாள் நினைவுகூரப்பட்டு வருகிறது.
சர்வதேச ரீதியில் ஏறத்தாழ 150 நாடுகளில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இந்நோய் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
சர்வதேச நீரிழிவு நோய் சம்மேளனத்தினாலும் உலக சுகாதார நிறுவனத்தினாலும் 1991 முதல் முறையாக நீரிழிவு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பிரசாரங்கள்:-
ஐ.நா. சபை, நீலநிறத்திலான வளையம் அடையாளச் சின்னமாக வெளியிட்டு இந்த நோய் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.
சர்வதேச ரீதியில் இந்த நீரிழிவு நோய் குறித்த பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. வயது வித்தியாசம், இன பேதம் என தயவு தாட்சண்யம் பார்க்காமல் இன்றைய நாளில் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு சுகாதார அமைப்புகளும் மருத்துவமனைகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், நீரிழிவு நோய் அமைப்புகளுடன் இணைந்து இத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு தருகின்றன. வானொலி, தொலைக்காட்சி என தொடர்பு சாதனங்கள் இதற்கு ஒத்துழைப்பு தருகின்றன.
இன்சுலின் அதிகமாவதால் நீரிழிவு நோய்:
இன்சுலின் என்ற முக்கிய ஹார்மோன் உற்பத்தியாவதிலும், அதன் செயல்பாடுகளில் குறை நேர்வதாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. உலக அளவில் இந்தியா தான் நீரிழிவு நோயில் முதல் இடத்தில் உள்ளது. பொதுவாக, நீரிழிவு நோய் என்பதை பற்றிய விளக்கங்களை நோயாளிகள் மட்டுமில்லாது அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பெற்றோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் 80% பிள்ளைகளுக்கும் இந்த நோய் வரும் என்பது ஆய்வு கருத்தாகும்.
தடுப்பதில் அதிக கவனம் செலுத்துவோம்:
மரபணு குறைபாடு, சுற்றுப்புறம் மற்றும் உடலின் சுய எதிர்ப்பு தன்மை இவற்றால் வரும் நீரிழிவு நோய்க்கு எவ்வித தடுப்பும் உபயோகிக்கப்படாது. மனிதகுலத்தில் எண்ணற்ற நோய்கள் இதுவரை கண்டுபிடிக்கப்
பட்டாலும் மனிதனின் உடலை சிறிது சிறிதாக பாதிப்புக்கு உள்ளாக்குவது, நீரிழிவு நோய்தான். ஆராய்ச்சிகள் பல செய்யப்பட்டாலும், ஒவ்வொரு முறையும் புதுபுது தகவல்கள் கூறப்படுவதால், நாம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த என்னதான் வழிமுறைகளை எடுத்துக் கொண்டாலும், அதனை வராமல் தடுப்பதிலேயே அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
நீரிழிவு நோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்...
நவம்பர்-14. உலக நீரிழிவு நாள்:- (World Diabetes Day)
Reviewed by JAYASEELAN.K
on
05:09
Rating: 5
Tags :
Special Day
No comments: