Home
NOVEMBER
நவம்பர் -14. கிராம் நிறச்சாயம் முறையை கண்டுபிடித்தவர்- ஆன்சு கிறிட்டியன் யோக்கிம் கிராம் (Hans Christian Joachim Gram) மறைந்த தினம்.
நவம்பர் -14. கிராம் நிறச்சாயம் முறையை கண்டுபிடித்தவர்- ஆன்சு கிறிட்டியன் யோக்கிம் கிராம் (Hans Christian Joachim Gram) மறைந்த தினம்.
05:38
Read
இன்று நினைவு நாள்:- நவம்பர் -14.
கிராம் நிறச்சாயம் முறையை கண்டுபிடித்தவர்-ஆன்சு கிறிட்டியன் யோக்கிம் கிராம் (Hans Christian Joachim Gram) மறைந்த தினம்.
பிறப்பு:-
செப்டம்பர்- 13, 1853 இல்
சேம்சு டவுனில் பிறந்தார்.
இவர், கோப்பனேகன் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் படித்தார்.
இவர் 1878 இல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து 1883 இல் பட்டம் பெற்றார்.
உயிரியலாளர் யபேட்டசு இசுட்டீன்சுட்ரப் (Japetus Steenstrup) என்பாரின் தாவரவியல் உதவியாளரரக இருந்தார்.
கண்டுபிடிப்புகள்:-
தாவரவியல் அறிமுகத்தால், மருந்தியல், நுண்ணோக்கியின்பயன்பாடு ஆகியவற்றைப் பற்றி அறிந்தார்.
1884 இல் பெர்லினில்இருந்தபொழுது பாக்டீரியாக்களில் உள்ள இரு பெரும் வகைகளைப் பிரித்தறிய ஒரு புது முறையைக் கண்டுபிடித்தார்.
இன்னுட்பத்திற்கு கிராம் நிறச்சாயம் முறை என்று பெயர். அதாவது ஒருசில வகையான பாக்டீரியாக்கள் அவற்றின் செல் அல்லது உயிரணுவின் சுவரில் உள்ள பொருளால் குறிப்பிட்ட நிறச்சாயம்ஏற்றும் பொழுது நீலம் சார்ந்த நிறம் அடைகின்றது. மற்ற வகை பாக்டீரியாக்களில் இவ்வகை நிறம் தங்குவதில்லை. ஆகவே நீல நிறம் ஏற்கும் பாக்டீரியாக்கள் நேர்வகை கிராம் (கிராம் பாசிட்டிவ்) பாக்டீரியாக்கள் என்றும், நீல நிறம் ஏற்காமல் இளஞ்சிவப்பு நிறம் காட்டும் பாக்டீரியாக்களை எதிர்வகை கிராம் (கிராம் நெகட்டிவ்) பாக்டீரியாக்கள் என்றும் கூறுவர். இந்நுட்பம் இன்றளவும் மருத்துவத் துறை பாக்டீரியாவியலில் சீர்வழக்கமான முறையாக பயன்பாட்டில் உள்ளது.
1891 இல் கிராம் கோப்பனேகன் பல்கலைக்கழகத்தில் மருந்தியலில் விரிவுரையாளராக இருந்து பின்னர் அவ்வாண்டில் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.
1900 இல் மருந்தியல் பேராசிரியர் பதவியைத் துறந்து, மருத்துவப் பேராசிரியரானார்.
நூல்கள்:-
மருத்துவப் பேராசிரியராக ஆன பின்பு மருத்துவ நோய்நாடும் கலைகள் பற்றி நான்கு தொகுதிகள் கொண்ட புத்தகத்தை வெளியிட்டார்.
இறப்பு:-
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பாக்டீரியாவியல் (நுண்ணுயிரியியல்) வல்லுநரான இவர்,
1923 இல் ஓய்வு பெற்ற இவர்,
நவம்பர்-14, 1938 இல் மரணமடைந்தார்.
நவம்பர் -14. கிராம் நிறச்சாயம் முறையை கண்டுபிடித்தவர்- ஆன்சு கிறிட்டியன் யோக்கிம் கிராம் (Hans Christian Joachim Gram) மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
05:38
Rating: 5
Tags :
NOVEMBER
No comments: