நவம்பர்:- 15-31. பிறந்த குழந்தை பராமரிப்பு வாரம்.
08:47
Read
இன்று சிறப்பு நாள் நவம்பர்:- 15-31.
பிறந்த குழந்தை பராமரிப்பு வாரம்.
நாடு முழுவதும் பிறந்த குழந்தை பராமரிப்பு வாரம் ஒவ்வொரு ஆண்டும் 15-21 நவம்பர் கொண்டாடப் படுகிறது. பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்தையும் உயிர்காப்பையும் மேம்படுத்த விழிப்புணர்வை உருவாக்குவதும் நடவடிக்கைகளை பரிந்துரைப்பதும் இதன் நோக்கமாகும்.
இந்தியாவில் பிறந்த ஆயிரம் குழந்தைகளில் எழுபது குழந்தைகள் ஓராண்டுக்குள் மரணம் அடைகின்றன. பிறந்த குழந்தை இறப்பில் இரண்டில் மூன்று பங்கு முதல் வாரத்தில் நிகழ்வதால் 0-4 வாரங்களே மிக முக்கிய காலகட்டம் ஆகும். கடந்த பத்தாண்டுகளில் குழந்தை மரணம் வெகுவாக குறைந்து விட்டாலும் இன்னும் அது அதிகமே.
பிறந்த குழந்தை இறப்புக்கு முக்கிய காரணங்கள்
தொற்று
கருவுக்கும் குழந்தைக்கும் உயிர்வளி குறைவாகக் கிடைத்தல்
குறைப்பிரசவம்
மகப்பேற்றில் சிக்கல்
பிறப்புக்குறைபாடு
தாய்சேய் பராமரிப்பு மூன்று கட்டமாகப் பிரிக்கப்படுகிறது:
பிறப்புக்கு முன் பராமரிப்பு (கர்ப்ப காலத்தில் தாய் நலம் பேணல்)- முதல் கட்டம்:தாய்க்கு டெட்டனஸ் தடுப்பூசி
இரத்த சோகை மற்றும் மிகை இரத்த அழுத்தக் கட்டுப்பாடு
தொற்றுக் கட்டுப்பாடும் சத்துணவும்
பேறுகால ஆயத்தம்
ஆபத்து குறிகளைக் கண்டு ஆலோசனை பெறுதல்
பேறுகாலப் பராமரிப்பு- 2வது கட்டம்
சுகாதாரமான குழந்தைப் பேறு
பேற்றைத் திறனுடன் கையாளுதல்
அவசரகால குழந்தைப்பேற்று பராமரிப்பை உரிய நேரத்தில் அணுகல்
கர்ப்ப காலத்திலும் பேற்றிலும் கவனம்
பேற்றுக்குப் பின் தாய்சேய் பராமரிப்பு – 3வது கட்டம்:
சிக்கல்களைக் கண்டறிதல் – பிறப்புக்குப் பின் குருதிக் கசிவு, பிறப்பு பாதைக் காயம், கருப்பை பிறழ்தல்
குடும்பக் கட்டுப்பாட்டுக்கு ஆலோசனை
சிசு நலத்தையும் ஊட்டத்தையும் பராமரித்தல்
பரிந்துரைக்கப்படும் நடவடிக்கைகள்
பேறுகாலப் பிரச்சினைகள் பற்றி கர்ப்பிணிகளுக்குப் போதனை
கர்ப்பகாலத்தில் குறைந்தபட்ச அடிப்படை பராமரிப்பு, ஊட்டச்சத்து ஆலோசனை, இரும்பும் பிற உயிர்ச்சத்துக்களும் அளித்தல்
நிறுவன/மருத்துவமனை பேற்றை ஊக்குவித்தல்; அல்லது பயிற்சி பெற்றவர்களால் பேறுகாலம்
பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை ஆரம்பத்தில் கண்டறிந்து மருத்துவமனையில் பராமரிப்பும் சிகிச்சையும்
தகுந்த நேரத்தில் உரிய தடுப்பு மருந்துகளை பிறந்த குழந்தைக்கு அளித்தல்
குழந்தைப் பேற்றுக்குப் பின் நினைவில் வைக்க்க் குறிப்புகள்
குழந்தையைக் கையாளும் முன் சோப் அல்லது கிருமிநாசினியால் கை கழுவுதல்
குழந்தையின் தலையையும் கழுத்தையும் தாங்குதல்
பிறந்து ஒரு மணி நேரத்தில் தாய்ப்பாலூட்டல்
6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே ஊட்டி பின்னரே
திட உணவு.
தேவைப் படும்போது அல்லது 24 மணி நேரத்தில் 8 முறை உணவளித்தல்
சடங்கு என்ற பெயரில் தாய்ப்பாலுக்குப் பதில் தேன், நீர் அல்லது வேறு பொருட்களைக் கொடுக்கக் கூடாது. குழந்தைக்கு இதனால் தொற்று ஏற்படலாம்.
தொப்புள் கொடி வீழந்து காயம் ஆறும் வரை பஞ்சுக் குளியலே அளிக்க வேண்டும் (1-4 வாரங்கள்).
எடை குறைவான பிறப்புக்கு கங்காரு தாய் பராமரிப்பு: தாய் தன் குழந்தையை நெஞ்சோடு அணைத்துத் தோலோடு தோல் தொடர்புடன் தாய்ப்பால் மட்டுமே அடிக்கடி அளித்தல்
“கர்ப்ப காலத்திலும் பேற்றுக்குப் பின்னும் தாய்க்கு அளிக்கும் சிறந்த பராமரிப்பே பிறந்த குழந்தைக்கு கொடுக்கக் கூடிய சிறந்த பராமரிப்பு”
நவம்பர்:- 15-31. பிறந்த குழந்தை பராமரிப்பு வாரம்.
Reviewed by JAYASEELAN.K
on
08:47
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
08:47
Rating: 5
Tags :
Special Day


No comments: