Breaking

நவம்பர்-17. திண்மங்களின் காந்தப் பண்புகளை ஆய்வு செய்த பிரான்சிய இயற்பியலாளர்- இலூயீ யூழ்சீன் பெலி நீல் (Louis Eugène Félix Néel) மறைந்த தினம்.


இன்று நினைவு நாள்:- நவம்பர்-17.

திண்மங்களின் காந்தப் பண்புகளை ஆய்வு செய்த 
பிரான்சிய இயற்பியலாளர்-
இலூயீ யூழ்சீன் பெலி நீல் (Louis Eugène Félix Néel) மறைந்த தினம்.

பிறப்பு:-

நவம்பர் -22, 1904 ஆம் ஆண்டு,
இலியோன், 
பிரான்சில் பிறந்தார்.
இலியான் நகரில் உள்ள பார்க்கு உயர்நிலைப் பள்ளியில் (Lycée du Parc) படித்தார். பின்னர் பாரிசில் உள்ள ஈக்கோல் நோர்மால் சுப்பீரியர் (École Normale Supérieure) என்னும் உயர் கல்விக் கழகத்தில் பயின்றார். அதன் பின்னர் 
சிட்ரஸ்போர்க் பல்கலைக்கழகத்தில் (University of Strasbourg) அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். 

கண்டுபிடிப்புகள்:-

இவருடைய திண்மநிலை காந்தப் பண்புகளின் ஆராய்ச்சியால் கணினி நினைவக உறுப்புகளில் மிகப்பல முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. ஏறத்தாழ 1930 இல் இவர் முற்றிலும் புதிய ஒருவகையான காந்தப்பண்பு இருக்கக்கூடும் என்று கூறினார். இது மறுதலை இரும்பியக் காந்தம் (antiferromagnetism) என்று அழைக்கப்படுகின்றது. 

இரும்புக் காந்தம்போல், ஆனால் ஒரு பொருளின் உள்ளே உள்ள காந்தத்
தன்மையுடைய அணுக்கூறுகள் ஒரே திசையில் காந்தப் புலம் கொள்ளாமல் எதிரெதிர் திசையில் நின்று ஏறத்தாழ காந்தத்தன்மை இல்லாதது போல் இருக்கும், ஆனால் தாழ்ந்த வெப்பநிலையில் ஓரளவுக்குக் காந்தத்தன்மை கொண்டிருக்கும். வெப்பநிலை உயர்ந்தால் இந்தக் காந்தத் தன்மையை இழந்துவிடும். இதே போன்ற, ஆனால் சிறிதளவு எதிரெதிர் காந்தச் சாய்வுகள் கொண்ட தன்மையுடைய 
சிறுமுரண் இரும்பியக் காந்தப் பண்பையும் 
இவர் 1947 இல் கண்டுபிடித்தார். இந்த சிறுமுரண் இரும்பியக் காந்தத்தன்மையும் நீல் வெப்பநிலை என்னும் வெப்பநிலை எய்தியவுடன் மறைந்துவிடும். இலூயிசு நீல், பாறைகளில் காணப்படும் மென்மையான காந்தத் தன்மைக்கும் தக்க விளக்கம் தந்தார். இவருடைய ஆய்வின் பயனாக நில உருண்டையின் காந்தப்புல வரலாற்றை அறிய முடிகின்றது.

விருதுகள்:-

ForMem ராயல் சொசைட்டி- (1966), 
கௌரவப் படையணி-(1966), 

1970 இல் சுவீடிய விண்ணியற்பியலாளர் (astrophysicist) ஃகானெசு ஆல்ஃவென் (Hannes Alfvén) உடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
எல்'எலெக்ட்ரோனிக்கின் சிறந்த தங்கப் பதக்கம்- (1971),
சொசைட்டே டி'ஐ ஊக்கத்தொகையின் மிகப்பெரிய தங்க பதக்கம், 1963 ஆம் ஆண்டில்,
உலக கலாசார கவுன்சிலின் நிறுவனர் உறுப்பினர்- (1981) போன்ற ஏராளமான விருதுகளை பெற்றார்.


இறப்பு:-

நவம்பர்-17, 2000 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

சிறப்புகள்:-

ஐரோப்பிய ஜியோபிசிகல் சொசைட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும் லூயிஸ் நீல் பதக்கம், இவரது பெயரில் நெல்லஸ் என்று வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

No comments:

Powered by Blogger.