Home
NOVEMBER
நவம்பர்-17. நரம்பு வளர்ச்சிக் காரணி யைக் கண்டுபிடித்த அமெரிக்க உயிரியலாளர்-ஸ்டான்லி கோஹன்(Stanley Cohen) பிறந்த தினம்.
நவம்பர்-17. நரம்பு வளர்ச்சிக் காரணி யைக் கண்டுபிடித்த அமெரிக்க உயிரியலாளர்-ஸ்டான்லி கோஹன்(Stanley Cohen) பிறந்த தினம்.
05:48
Read
இன்று பிறந்த நாள்:-நவம்பர்-17.
நரம்பு வளர்ச்சிக் காரணி யைக் கண்டுபிடித்த அமெரிக்க உயிரியலாளர்-ஸ்டான்லி கோஹன்(Stanley Cohen) பிறந்த தினம்.
பிறப்பு:-
நவம்பர்-17, 1922 ஆம் ஆண்டு
புரூக்ளின், நியூ யோர்க்கில்
பிறந்தார்.
இவர் ப்ரூக்ளின் கல்லூரியில்
1943 இல் தனது இளங்கலை பட்டம் பெற்றார். இவர் பணம் சம்பாதிக்க ஒரு பால் பதப்படுத்தும் ஆலையில் ஒரு நுண்ணுயிரியல் வல்லுனராக பணிபுரிந்த பிறகு, 1945 இல் ஒபெர்லின் கல்லூரிவிலங்கியலில் எம்.ஏ. பட்டம் பெற்றார். 1948 இல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
கண்டுபிடிப்புகள்:-
வாஷிங்டன் பல்கலைக்கழகம் செயின்ட் லூயிசில் 1950 ல், கோஹன் நரம்பு வளர்ச்சி காரணி Nerve Growth Factor-NGF மற்றும் எபிடெர்மல் வளர்ச்சி காரணி
(Epidermal Growth Factor-EGF)
என கண்டுபிடித்து தனிமைப்படுத்தினார்.
மேலும் அவர் தொடர்ந்து செல்லுலார் வளர்ச்சி காரணிகள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டும் பிறகு 1959 இல் வாண்டர்பில்ட்
பல்கலைக்கழகம் பள்ளி மருந்துவத்தில் சேர்ந்தார். செல்லுலார் வளர்ச்சிக் காரணிகளின் மீதான அவரது ஆராய்ச்சி புற்றுநோயின் வளர்ச்சியை புரிந்துகொள்வதற்கும், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளை வடிவமைப்பதற்கு அடிப்படையானது ஆகும்.
விருதுகள்:-
லூயிசா கிராஸ் ஹோர்விட்ஸ்
பரிசு-(1983), ஆல்பர்ட் லஸ்கர் விருது அடிப்படை மருத்துவ ஆராய்ச்சி-(1986)
1986 ஆம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசை ரீட்டா-லெவி மோன்டால்சினியுடன் சேர்ந்து பெற்றார்.
பிராங்க்ளின் பதக்கம்-(1987) போன்ற பதக்கங்களை பெற்றார்.
Thesis:-
The Nitrogenous Metabolism of the Earthworm-(1949)
எண்ணற்ற சாதனைகளை செய்துக்கொண்டு இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
நவம்பர்-17. நரம்பு வளர்ச்சிக் காரணி யைக் கண்டுபிடித்த அமெரிக்க உயிரியலாளர்-ஸ்டான்லி கோஹன்(Stanley Cohen) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
05:48
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
05:48
Rating: 5
Tags :
NOVEMBER


No comments: