Breaking

உங்கள் உடல் எடை ஏன் அதிகரிக்கிறது? 5 ஆச்சரிய காரணங்கள் காரணம் 3

உங்கள் உடல் எடை ஏன் அதிகரிக்கிறது?
5 ஆச்சரிய காரணங்கள்
காரணம் 3

நேரமும் உணவும்
ஒரு பழமொழி உண்டு.'' காலையில் அரசனை போல உண்ண வேண்டும். இளவரசனை போல மதிய உணவை முடிக்க வேண்டும், ஆண்டியை போல இரவு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்'' . இதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது.
உடல்பருமனுக்கான சிறப்பு மருத்துவர் ஜேம்ஸ் ப்ரவுன் கூறுகையில்
'' எவ்வளவு தாமதமாகச் சாப்பிடுகிறோமோ அதைப் பொறுத்து உடல் எடையும் கூடும். நாம் இரவில் குறைவாக வேலைச் செய்கிறோம் என்பதால் அல்ல நமது உடல் கடிகாரமே இதற்கு காரணம்'' என்கிறார்.
'' பகல் நேரத்தில் உடல் நிறைய கலோரிகளை திறமையாக கையாளுவதற்கும் இரவு நேரத்தில் சற்று குறைவாக கையாள்வதற்கும் ஏற்றவகையில் உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது'' என்கிறார் ப்ரவுன்.
இக்காரணத்தின் பொருட்டு ஒழுங்கற்ற வேலை நேரம் கொண்டவர்களுக்கு உடல் எடை கூடும் பிரச்சனை அதிகளவில் இருக்கிறது. இரவு நேரங்களில் நமது உடல் கொழுப்பு மற்றும் சர்க்கரையை செரிக்க சிரமப்படும். ஆகவே இரவு 7 மணிக்கு மேல் நிறைய கலோரி உள்ள உணவுகளை தவிர்ப்பதே நீங்கள் உடல் எடையை குறைக்கவோ அல்லது உடல் எடை கூடுவதை தவிர்க்கவோ உதவக்கூடிய முதல் விஷயம்.
கடந்த ஒரு தசாப்தத்தில், பிரிட்டனில் சராசரி இரவு உணவுக்கான நேரம் ஏழு மணியில் இருந்து பத்து மணிக்குச் சென்றுவிட்டது. இது உடல்பருமன் அளவு அதிகரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது என்கிறார் மருத்துவர் ப்ரவுன்.
ஆனால் இன்றைய வேலை பாங்கு மற்றும் பரபரப்பான வாழ்க்கைமுறையில் சில விஷயங்களை நாம் செய்வதன்மூலம் நம் இடுப்பு அளவில் சில மாறுதல்களை உண்டாக்கமுடியும்.
மருத்துவர் ப்ரவுனை பொறுத்தவரையில் காலை உணவை தவிர்ப்பது அல்லது ஒரு பிரட் துண்டை மட்டும் எடுத்துக்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும்.
புரதச்சத்து மற்றும் சில கொழுப்புச் சத்து, மாவுச்சத்து உள்ள உணவுகளை (முழு தானிய சிற்றுண்டியுடன் முட்டை) எடுத்துக்கொள்வது போன்றவை உங்களுக்கு திருப்தியையும் நீண்ட நேரத்துக்கான காலை உணவாகவும் இருக்கும்.
அதைத்தொடர்ந்து ஊட்டச்சத்துமிக்க மதிய உணவையும் மற்றும் சற்று இலகுவான இரவு உணவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Powered by Blogger.