விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து நொறுங்கியதை நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உறுதி செய்தது..
சந்திரயான் 2 விண்கலத்தில் நிலவை ஆய்வு செய்வதற்காக சென்ற விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து நொறுங்கியதை நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உறுதி செய்தது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி சந்திரயான் 2 என்ற விண்கலம் செலுத்தப்பட்டது. இந்த விண்கலமானது ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என்ற அமைப்புகளை கொண்டது.
அதில் லேண்டர் கருவி நிலவில் செப்டம்பர் 7-ஆம் தேதி தரையிறங்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கிலோ மீட்டருக்கு முன் லேண்டருடனான இஸ்ரோவின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் நிலவை சுற்றி வரும் இஸ்ரோவின் ஆர்பிட்டர் கருவி லேண்டர் சாய்தளமாக விழுந்ததை புகைப்படம் எடுத்து அனுப்பியது.
ரிகனைசன்ஸ் ஆர்பிட்டர்
இந்தியா
இஸ்ரோவின் ரிகனைசன்ஸ் ஆர்பிட்டர் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் நிலவை சுற்றி வருகிறது. இதை வைத்து லேண்டரை படம் எடுக்கும் முயற்சியும் பலனளிக்கவில்லை. அதற்குள் நிலவில் குளிர் காலம் தொடங்கிவிட்டதால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து சந்திரயான் 3 திட்டத்தில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை நாசாவின் ரிகனைசன்ஸ் ஆர்பிட்டர் கண்டுபிடித்து படத்தை வெளியிட்டுள்ளது. அதில் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியதை நாசா உறுதி செய்தது.
அக்டோபர் 14, 15, நவம்பர் 11 ஆகிய தேதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. லேண்டர் விழுந்த இடத்தை கண்டுபிடிக்க உதவியது தமிழகத்தைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் ஆவார்.


No comments: