Breaking

கிரகணத்தின் போது செய்ய வேண்டியதும் செய்யக் கூடாதவைகள் என்ன என்று பார்ப்போம்..சூரிய கிரகணத்தின் போது என்னென்ன பரிசோதனைகள் நடத்தப்படும்


செய்யவேண்டியது

கிரகணத்தின் பொழுது சூரியன் முழுமையாக மறைக்க படுவதற்கு முன்னால் சூரிய பிம்பத்தை திரையில் பிடித்து பார்ப்பதே சிறந்த வழி

ஊசித்துளை காமிரா மூலம் சூரியனை பிடித்து அதை சுவற்றில் செய்து பார்க்கலாம்.

சிறிய தொலைநோக்கி அல்லது பைனாகுலர் மூலமாக சூரிய பிம்பத்தை திரையில் பிடித்து பார்க்கலாம் சூரியன் பகுதியாக மறைக்கப்பட்டிருக்கும் பொழுது அறிவியல்பூர்வமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒளி வடிகட்டிகள் மூலம் பார்ப்பது நல்லது சூரிய ஒளி வடிகட்டி உபயோகிக்கும் முன் சிறு கீறல்கள் இருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டும் அப்படி இருந்தால் அதன் வழியே பார்க்கக்கூடாது ஒளி வடிகட்டி களை எந்த சூழ்நிலையிலும் கைகளால் துடைக்க கூடாது

சூரியன் முழுமையாக மறைக்கப்படும் பொழுது மட்டும் சூரியனை ஒரு சில நொடிகள் விட்டு விட்டு பார்க்கலாம் சூரிய கிரகணத்தின்போது நல்ல தேர்ச்சி பெற்றவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு அவர்கள் சொல்வது போல் செய்வது நல்லது

செய்யக்கூடாதவைகள்

எந்த சூழ்நிலையிலும் பகுதி கிரகணத்தை யோ அல்லது பறை கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது தொலைநோக்கி அல்லது பைனாகுலர் மூலம் கிரகணத்தை பார்க்க கூடாது புகைபிடித்த கண்ணாடி கூலிங்கிளாஸ் மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்த ஒளி வடிகட்டிகள் மூலம் பார்க்கக் கூடாது சில நொடிகளுக்கு மேல் சூரியன் முழுமையாக மறைக்கப்பட்டு இருந்தாலும் தொடர்ந்து பார்க்கக்கூடாது

பரிசோதனைகள்
சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்படும் பொழுது சூரிய தட்டின் பல்வேறு அம்சங்கள் பற்றி பரிசோதிக்கப்படும் சூரிய பள்ளிகளின் செயல்பாடு காந்தப் புலத்தில் ஏற்படும் மாற்றம் குறித்து ஆராயப்படும் ஊதாக் கதிர்கள் எக்ஸ்ரே கதிர்கள் சூரிய வளி மண்டலத்தில் எவ்வளவு சக்தி உடையதாக இருக்கின்றன என்பது பரிசோதிக்கப்படும் சூரியனின் ஒளி மற்றும் வாயு மண்டலம் பற்றி கிரகணத்தின்போது நன்றாக ஆராய முடியும்

No comments:

Powered by Blogger.