Breaking

நாம் சூரிய கிரகணத்தை பார்க்கலாமா... சூரிய கிரகணத்தை எப்படி பாதுகாப்பாக பார்க்கலாம்


கிரகணங்கள் இயற்கையில் நடக்கக்கூடிய ஒரு அபூர்வ நிகழ்வு இதற்கான காரணங்களை அறிவியல்பூர்வமாக அறிவோம் ஒருவர் தகுந்த உபகரணத்தின் உதவியோடும் முன்னெச்சரிக்கையோடு இவற்றைப் பார்க்கலாம்

முழு சூரியனும் மறைக்கப்படும் போது சில நொடிகள் வெறும் கண்ணால் கிரகணத்தை பார்க்க முடியும் பகுதி அல்லது வலை கிரகணங்களை எந்த சூழ்நிலையிலும் வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது சூரியனை நிலவு 99% மறைத்தாலும் கூட கிரகணத்தை நேரடியாக பார்க்க கூடாது அப்படி பார்க்க நேர்ந்தால் கண்களின் பார்வையை நிரந்தரமாக பறிபோக வாய்ப்பு உண்டு ஆகையால் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் சூரியன் பிம்பத்தை கண்ணாடி மூலம் பிரதிபலிக்க செய்துபார்ப்பது பாதுகாப்பான முறை கிரகணங்களை பார்ப்பதற்கென்றே சில கண்ணாடிகள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன அவைகளை பயன்படுத்தி கிரகணத்தை பார்க்கலாம் அதையும் கூட சில வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்ப்பது நல்லதல்ல வெல்டிங் கண்ணாடி எண் 14 வெல்டிங் கடைகளில் கிடைக்கும் இந்த கண்ணாடியை பயன்படுத்தி பார்க்கலாம் அகச்சிவப்பு மற்றும் புற ஊதாக் கதிர்களை வடிகட்டி விடும் பார்ப்பதற்கு என்றே தயாரிக்கப்பட்ட மயிலார் பிலிம் அல்லது பைனாகுலர் முன் கண்ணாடி வடிகட்டி களை கட்டி கிரகணங்களை பார்க்கலாம்

No comments:

Powered by Blogger.