Breaking

ஆண்ட்ராய்ட் மொபைல் பாஸ்வேர்டு மறந்து விட்டதா? கவலை வேண்டாம்..அதை இப்படியும் திறக்கலாம்..

ஆண்ட்ராய்ட் பாஸ்வேர்ட் மறந்து விட்டதா? (கவலை வேண்டாம்)

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று ஸ்கிரீன் லாக் பாஸ்வேர்ட் மறந்துவிட்டால் எப்படி அதனைத் திறப்பது என்பது? ஆண்ட்ராய்ட் நுட்பம் அறிந்தவர்கள் இதனை எளிதாக செய்யமுடியும். அதிகமாக பயன்படுத்தாதவர்களுக்காகவே இந்த டிப்ஸ்.

ஆண்ட்ராய்ட் போனில் லாக் ஸ்கிரீனை திறக்க 3 அல்லது 5 முறைக்கு மேல் தவறான பின் அல்லது பேட்டர்ன் பயன்படுத்தினால் தானாகவே (30 வினாடி எச்சரிக்கைக்கு பின்னர்) லாக் ஆகிவிடும். 

இதனை மீட்க வேறு மொபைல் அல்லது கணினி வழியாக உங்கள் கூகுள் கணக்கு மூலமாக ஆண்டிராய்டு டிவைஸ் மேனேஜரில் நுழையவேண்டும்.

இதற்கான இணைய முகவரி: 

https://myaccount.google.com/find-your-phone ஆண்ட்ராய்ட் டிவைஸ் மேனேஜர் தளத்தில் உங்கள் ஃபோனில் பதிவுசெய்துள்ள ஜிமெயில் மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டை உள்ளிடவும். 

கணக்கினுள் நுழைந்தவுடன் , அதில் உங்கள் ஆண்ட்ராய்ட் கணக்கு மூலம் பயன்படுத்தப்படும் ஃபோன்கள் விபரம் காட்டப்படும். 

ஒருவர் பல ஃபோன்களில் ஒரே கணக்கைப் பயன்படுத்தலாம் என்பதால், வெவ்வேறு ஃபோன்கள் காட்டப்படும். 

ஒரே ஃபோன் மட்டுமே பயன்படுத்துபவராக இருந்தால் அது மட்டுமே காட்டப்படும். 

இப்போது அன்லாக் செய்யவேண்டிய ஃபோன் மாடலைத் தேர்வு செய்ய வேண்டும். 

அடுத்து அதில் இடம் பெற்றுள்ள லாக் ஸ்க்ரீன் என்ற வசதியை க்ளிக் செய்யவும். 

அதில் உங்கள் புதிய பாஸ்வேர்டை பதிவு செய்யவும். பின்னர் அந்த போனை லாக் செய்ய வேண்டும். இப்போது உங்கள் ஃபோனை எடுத்து அதில் புதிதாகக் கொடுத்த பாஸ்வேர்டை பயன்படுத்தி திறக்கலாம்.

ஆண்ட்ராய்ட் ஃபோனைத் திறக்க மற்றொரு வழிமுறையும் உள்ளது. அது கூகுள் அஸிஸ்டெண்ட் மூலமாக செயல்படும். இந்த வசதியை முன்பே ஃபோனில் உள்ளீடு செய்திருக்கவேண்டியது அவசியமாகும். 

கூகுள் அஸிஸ்டெண்ட் செயலியில் நம்முடைய குரலை பதிந்து வைத்துக் கொண்டு ஸ்கிரீனை அன்லாக் செய்யவும், ஃபோனில் உள்ளவை மற்றும் இணையத்திலும் தகவல்களை குரல் வழிக் கட்டளைகள் மூலம் தேடலாம். இந்த வசதி ஆண்ட்ராய்ட் அடிப்படை பயனருக்கு சற்றுக் கடினமாகவே இருக்கும். விரைவில் தமிழ் உள்ளிட்ட 10 இந்திய மொழிகள் கூகுள் அஸிஸ்டெண்ட் சேவையில் சேர்க்கப்படவிருக்கின்றன. அப்போது இந்த வசதி நமக்கு எளிதாக மாறும் என்று நம்பலாம்.

No comments:

Powered by Blogger.