Home
JANUARY
ஜனவரி-06 பிரெஞ்சு இயற்பியலாளர், ஓசோன் அடுக்கு கண்டுபிடித்தவர்- ஹென்றி புஷியோன் (Henri Buisson) நினைவு தினம்.
ஜனவரி-06 பிரெஞ்சு இயற்பியலாளர், ஓசோன் அடுக்கு கண்டுபிடித்தவர்- ஹென்றி புஷியோன் (Henri Buisson) நினைவு தினம்.
08:40
Read
இன்று நினைவு நாள்:- ஜனவரி-06
பிரெஞ்சு இயற்பியலாளர்,
ஓசோன் அடுக்கு கண்டுபிடித்தவர்-
ஹென்றி புஷியோன் (Henri Buisson) நினைவு தினம்.
ஜூலை -15, 1873ல் பாரிசில் பிறந்தார்.
இவர் 1901ல் முனைவர் பட்டம் பெற்றார்.
பணிகள்:-
1914 முதல் 1943 வரை மார்செல்லில் இயற்பியல் பேராசிரியாகப் பணியாற்றினார்.
ஆய்வுகள்:-
இவருடன் சார்லஸ் பேப்ரியும்இணைந்து புற ஊதாக் கதிர்களை வளி மண்டலத்தினை ஆராய்ந்தனர்.
இவர்கள் ஸ்பெக்ட்ராஸ்கோப் மூலம் புற ஊதாக் கதிர்களை வளி மண்டலத்தில் அளவிட்டனர்.
வளி மண்டலத்தில் புற ஊதாக் கதிர்கள் உறிஞ்சுப்படுதலை கண்டுபிடித்தனர்.
அதன் காரணமாக 1913ல் ஓசோன் படலத்தினை கண்டறிந்தனர்.
ஓசோன் படலம், ஓசோனடுக்கு, சாரலியம் / மிகுவுயிரகப் படலம்.
ஓசோன் படலம் (Ozone layer) என்பது, பூமியின் வளிமண்டலத்தில் ஒப்பீட்டளவில் உயர் செறிவுடைய ஓசோனைக் (O3) கொண்ட ஒரு படலம் ஆகும்.
பூமியில் வாழ்பவர்களுக்கு கேடுவிளைவிக்கக் கூடிய சூரியனின் புறஊதாக் கதிர்களை, 93% முதல் 99% வரை உட்கிரகிக்கிறது.
பூமிக்கு மேல் தோராயமாக 10 கிமீ முதல் 50 கிமீ வரையுள்ள தொலைவில் உள்ள ஸ்ட்ரேடோஸ்பியர் என்ற வளிமண்டலத்தின் கீழ்ப்பகுதியில் தான் 91%க்கும் மேல் ஓசோன் இருக்கிறது. எனினும் பருவநிலை மற்றும் புவியியல் சார்ந்து அதன் அடர்த்தி இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.
1913 ஆம் ஆண்டு பிரஞ்சு இயற்பியல் வல்லுநர்கள் சார்லஸ் ஃபேப்ரி (Charles Fabry) மற்றும் ஹென்றி புய்சன் (Henri Buisson) ஆகியோரால் ஓசோன் படலம் கண்டறியப்பட்டது.
இதன் பண்புகள் பிரிட்டிஷ் வானியல் நிபுணர் ஜி. எம். பி. டோப்சனால் (G. M. B. Dobson) விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இவர் எளிமையான ஸ்பெக்ட்ரோபோட்டோமீட்டரை (டோப்சோன்மீட்டர்) உருவாக்கினார். அதனை நிலத்தில் இருந்து வளிமண்டல ஓசோனை அளவிடுவதற்குப் பயன்படுத்தலாம்.
1928 மற்றும் 1958 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஓசோன் கண்காணிப்பு நிலையங்களின் நெட்வொர்க்கை உலகளாவிய அளவில் டோப்சன் நிறுவினார்.
அது தற்போதும் தொடர்ந்து இயங்குகிறது. டோப்சனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஓசோன் மேனிலையின் கனப்பட்டை அடர்த்தியின் (columnar density) ஏற்ற அளவீட்டிற்கு 'டோப்சன் அலகு' எனப் பெயரிடப்பட்டது.
இறப்பு:-
ஜனவரி- 06, 1944ல் மார்செல்லில் இறந்தார்.
ஜனவரி-06 பிரெஞ்சு இயற்பியலாளர், ஓசோன் அடுக்கு கண்டுபிடித்தவர்- ஹென்றி புஷியோன் (Henri Buisson) நினைவு தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
08:40
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
08:40
Rating: 5
Tags :
JANUARY


No comments: