Breaking

ஆறு கிரகணம் பற்றி அறிந்து கொள்வோம்






ஆறு கிரகணம் பற்றி அறிந்து கொள்வோம்



சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் இருந்து, நடுவில் சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இது அமாவாசை தினத்தில் நடைபெறும். சூரியன், பூமி, சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் இருந்து இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இது பவுர்ணமி தினத்தில் நடைபெறும். 2020ம் ஆண்டு ஆறு கிரகணம் ஏற்பட உள்ளது. இதில் நான்கு சந்திர கிரகணம். இரண்டு சூரிய கிரகணம். ஆறில் மூன்று கிரகணம் இந்தியாவில் தெரியும் வாய்ப்பு உள்ளது. 2019ம் ஆண்டில் மூன்று சூரிய கிரகணம், இரண்டு சந்திர கிரகணம் ஏற்பட்டது.

 மழை தரும் மலை


மேற்கு தொடர்ச்சி மலை இந்தியாவின் மேற்கில் மஹாராஷ்டிரா, - குஜராத் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே தொடங்கி மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, தமிழகம் மற்றும் கேரளாவில் பரவியுள்ளது. பரப்பளவு 1,60,000 சதுர கி.மீ., இது யுனெஸ்கோவின் உலக பண்பாட்டு சின்னங்களில் ஒன்று. சராசரி உயரம் 3,900 அடி. நாட்டின் 40 சதவீத நீர் உற்பத்தி இதன் மூலம் கிடைக்கிறது. இது அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்காற்றை மறைத்து, மேற்கில் உள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு அதிக மழையை தருகிறது. இதன் உயரமான சிகரம் 'ஆனைமுடி'.

No comments:

Powered by Blogger.