Breaking

பூமியை சுற்றிவரும் குட்டி நிலவு கண்டுபிடிப்பு






பூமியை சுற்றிவரும் குட்டி நிலவு கண்டுபிடிப்பு - ஆனால் நம்மை விரைவில் பிரிந்துவிடும்!
பூமியை சுற்றிவருகின்ற குட்டி நிலவு ஒன்று புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக மைனர் பிளானட் சென்டர் அறிவித்துள்ளது.

இந்த குட்டி நிலவு கடந்த 3 ஆண்டுகளாக பூமியை வலம்வந்து கொண்டுள்ளதாம். ஆனால், இதுவரை இது மனிதனின் கண்ணில் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், இந்த நிலவு பூமியுடன் நீண்ட காலத்திற்கு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தக் குட்டி நிலவுக்கு `2020 CD' எனப் பெயரிட்டுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்வது இயல்புதான். இதற்கு முன்னர் 2006-ம் ஆண்டு இது போன்ற ஒரு விண்கல் பூமியைச் சுற்றி வந்தது. அதன் பிறகு தன் பாதையில் சென்று விட்டது. சூரியன், சந்திரன் மற்றும் பூமி மூன்றின் ஆதிக்கமும் இந்தப் பொருள்களின் மீது இருப்பதால் இவற்றின் பாதை எந்த நேரமும் மாறுபடும்.

இந்தக் குட்டி நிலவு, பூமியை மோதுவதற்கான சாத்தியமும் உண்டு. ஆனால் இது அளவில் மிகவும் சிறியதாக இருப்பதால் தரையைத் தொடும் முன்பாக வளிமண்டலத்திலேயே எரிந்து விடும். அப்படி மோதாத பட்சத்தில் பூமியைச் சில சுற்றுகள் சுற்றி விட்டு பின்பு சூரியனை நோக்கிச் சென்றுவிடும் எனத் தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள்.

இதுபோன்ற பொருள்கள் அறிவியல் உலகில் 'குவாஸி சாட்டிலைட்' (Quasi Satellite) என்று அழைக்கப்படுகின்றன. 1991ஆம் ஆண்டு இதேபோன்ற குட்டி நிலவு ஒன்று கண்டறியப்பட்டது. அது சில ஆண்டுகள் பூமியை சுற்றி வந்தது. பின்னர் அது வேறு பாதையில் பூமியை விட்டு வெகுதூரம் சென்று விட்டது. இது மீண்டும் வரும் 2028ம் ஆண்டு பூமியின் அருகில் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.