Home
MARCH
மார்ச்-18. டீசல் இன்ஜினைக் கண்டுபிடித்த ஜெர்மனி பொறியியலாளர்-ருடால்ஃப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் (Rudolf Christian Karl Diesel) பிறந்த தினம்.
மார்ச்-18. டீசல் இன்ஜினைக் கண்டுபிடித்த ஜெர்மனி பொறியியலாளர்-ருடால்ஃப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் (Rudolf Christian Karl Diesel) பிறந்த தினம்.
10:33
Read
இன்று பிறந்த நாள்:- மார்ச்-18.
டீசல் இன்ஜினைக் கண்டுபிடித்த ஜெர்மனி பொறியியலாளர்-ருடால்ஃப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் (Rudolf Christian Karl Diesel) பிறந்த தினம்.
பிறப்பு:-
மார்ச்-18, 1858 ஆம் ஆண்டு,
பரிஸ், பிரான்சில் பிறந்தார். இவரது அப்பா புத்தக பைண்டிங், தோல் பொருள் உற்பத்தி தொழில்கள் செய்தவர்.
பிறகு பிரான்ஸில் இருந்து இங்கிலாந்துக்கு குடியேறினார்கள். இவர் தனது
படிப்பைத் பிரான்ஸில் உள்ள உறவினர் வீட்டில் பயின்றார். பிறகு தனது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ஜெர்மனிக்குச் சென்றார். ஆக்ஸ்பர்கில் புதிதாகத் தொடங்கப்பட்ட தொழிற்கல்விக் கூடத்தில் சேர்ந்தார்.
பிறகு முனீச் நகரில் உள்ள ராயல் பவேரியன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
பிறகு சல்ஸர் பிரதர்ஸ் மிஷின் வொர்க்ஸ் என்ற நிறுவனத்தில் சேர்ந்து பொறியியல் நுணுக்கங்களைக் கற்றார்.
முனீச்சில் தனது பேராசிரியர் கார்ல் வான் லிண்டேவின் குளிர்சாதனப் பெட்டி தொழிற்சாலையில் சேர்ந்தார்.
கண்டுபிடிப்புகள்:-
நவீன முறையில் குளிர்சாதனப் பெட்டியை வடிவமைக்க உதவினார். அடுத்த ஆண்டே இந்நிறுவனத்தின் இயக்குநரானார். இருவரும் இணைந்து பல இயந்திரங்களை வடிவமைத்தனர். இன்ஜின்கள் குறித்தும் டீசல் ஆராய்ந்தார். மேலும் அந்த இன்ஜின்களின் திறனை 4 மடங்கு அதிகரிக்க முடியும் என்று நம்பினார். இதற்காக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
10 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து விதவிதமான இன்ஜின்களை வடிவமைத்தார்.
நீராவி இன்ஜினில் 90 சதவீத எரிபொருள் வீணாவதைக் கண்டறிந்தார். கார்னாட் சுழற்சி அடிப்படையிலான இன்ஜினை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கினார்.
இறுதியில் நீராவி இன்ஜினுக்கு மாற்றாக ‘கம்ப்ரெஷன் இக்னிஷன்’ இன்ஜினை கண்டுபிடித்தார். அதுவே அவரது பெயரில் டீசல் இன்ஜின் எனப்படுகிறது.
டீசல் இன்ஜின் கண்டுபிடிப்பு குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
பல நாடுகளிலும் டீசல் இன்ஜினுக்கு காப்புரிமை பெற்றார்.
டீசல் இன்ஜினில் சில வகையான தாவர எண்ணெய்களையும் எரிபொருளாகப் பயன்படுத்தமுடியும் என்றும் கணித்தார்கள்.
பெட்ரோலியத்தில் இருந்து எடுக்கப்பட்டு டீசல் இன்ஜினுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்க்கும் ‘டீசல்’ என்ற பெயரே நிலைத்துவிட்டது.
1942 ஆம் ஆண்டு டீசல் என்ற பெயரில் டீசல் பெயரிடப்பட்டது.
விருதுகள்:-
எலியட் க்ரஸன் பதக்கம் (1901) போன்ற விருதுகளை பெற்றார்.
மறைவு:-
தொழில் வளர்ச்சியில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய இவர்,
செப்டம்பர்-29, 1913 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
மார்ச்-18. டீசல் இன்ஜினைக் கண்டுபிடித்த ஜெர்மனி பொறியியலாளர்-ருடால்ஃப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் (Rudolf Christian Karl Diesel) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
10:33
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
10:33
Rating: 5


No comments: