Breaking

மார்ச்-23. உலக வானிலை தினம். வானிலை (Weather DAY)

                                   




மார்ச்-23.

உலக வானிலை தினம்.

வானிலை (Weather DAY)

இன்று:- மார்ச்-23.

#உலக #வானிலை #தினம்.
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
#வானிலை (Weather):-

ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட 
வளிமண்டலத்தில், இடம்பெறும் ஒரு தொகுதி தோற்றப்பாடுகளைக்குறிக்கப் பயன்படுகிறது. வானிலை நடப்பு நிலையைக் குறிக்கிறது. 

காற்று, முகில், மழை, பனி, மூடுபனி, தூசிப் புயல்கள் போன்ற பொது வானிலைத் தோற்றப்பாடுகளையும்; அரிதாக நிகழும் இயற்கை அழிவுகள், சூறாவளி, பனிப் புயல் போன்றவற்றையும் உள்ளடக்கியது ஆகும்.

#வானிலை தினம்:-
🌦🌦🌦🌦🌦🌦🌦

வானிலையை சீராக வைப்பதற்கு உரிய வழிமுறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக வானிலை தினம் ஒவ்வொரு ஆண்டும், மார்ச்-23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக வானிலை அமைப்பு, 1950ல் துவக்கப்பட்டது. காலநிலை , வானிலை, தண்ணீர் போன்றவற்றில் ஆய்வுகளை மேற்கொள்வதில், ஐ.நா.,வின் சிறப்பு அமைப்பாக, 1951 முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த அமைப்பில், இந்தியா உட்பட 191 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 

1880 ஆம் ஆண்டு முதல் உலகில் வெப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் அதிக வெப்பம் உணரப்பட்ட ஆண்டாக 2015 ஆம் ஆண்டை அறிவித்தது நாசா. இதைத்தொடர்ந்து எல்நினோ 2016 ஆம் ஆண்டும் அதிக வெப்பம் மிக்க ஆண்டாக கருதப்பட்டது.
புவியின் வெப்பநிலை குறித்து நாசாவின் ஜிஐஎஸ்எஸ் ஆய்வு அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன்படி பருவநிலை மாற்றம் காரணமாக 2017ஆம் ஆண்டு உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
அந்த வகையில் 2017ஆம் ஆண்டில் சராசரியைவிட 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாகப் பதிவாகியுள்ளது என நாசாவின் ஜிஐஎஸ்எஸ் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 40 ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை அசுர வேகத்தில் அதிகரித்து வருவதாகவும் ஜிஐஎஸ்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

சுகாதாரம், உணவு, 
வெப்பம், காற்றின் வேகம், திசை, மாறிவரும் பருவமழையின் அளவுகள் பற்றிய தகவல்களே ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கிய சக்திகள் ஆகும். இவற்றை மெல்ல மெல்ல நாம் இழந்து வருகிறோம். இந்நிலை தொடர்ந்தால், 'மூன்றாம் உலகப்போர்' ஏற்பட வானிலை மாற்றம் ஒரு ஏதுவாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"Weather - Ready; Climate Start" தொனிப் பொருளில் 2018 ஆம் ஆண்டிற்கான வானிலை தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

விவசாயம், பாதுகாப்பான தண்ணீர், வறுமை ஒழிப்பு, இயற்கை பேரழிவுகளை தவிர்த்தல் போன்ற பணிகளை இவ்வமைப்பு மேற்கொண்டு வருகிறது. 

வானிலை மாறுபடுவதால்...: தற்போதைய காலநிலை மாற்றம் மற்றும் வெப்பமயமாதலால் மனிதர்கள் மட்டுமின்றி, மற்ற உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது இன்றைய தலைமுறைக்கு, சவாலாக திகழ்கிறது. தொழிற்சாலைகளால் காற்றில் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிக்கிறது. ஓசோன் பாதிப்புக்குள்ளாகி, பூமியில் வெப்பம் அதிகரிக்கிறது. தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதில் வளரும் நாடுகளை விட, வளர்ந்த நாடுகளுக்கு தான், அதிக பங்கு இருக்கிறது. 

#காத்திருக்கும் #அபாயம்:
🌦🌦🌦🌦🌦🌦

வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாறுபாட்டால், வரும் காலத்தில் வறட்சி, வெள்ளப் பெருக்கு, புயல் போன்ற பாதிப்புகளை அடிக்கடி சந்திக்க நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். 

வெப்பம் அதிகரிப்பதால் உலகில் உள்ள பனிப்பாறைகள் உருகி எதிர்காலத்தில் கடல் நீர்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

No comments:

Powered by Blogger.