Home
APRIL
ஏப்ரல்-12. சோவியத் ரஷ்யா இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர்- இகோர் எவ்ஜெனீவிச் டாம் (Igor Yevgenyevich Tamm) மறைந்த தினம்.
ஏப்ரல்-12. சோவியத் ரஷ்யா இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர்- இகோர் எவ்ஜெனீவிச் டாம் (Igor Yevgenyevich Tamm) மறைந்த தினம்.
08:21
Read
இன்று நினைவு நாள்:- ஏப்ரல்-12.
சோவியத் ரஷ்யா இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர்- இகோர் எவ்ஜெனீவிச் டாம்
(Igor Yevgenyevich Tamm) மறைந்த தினம்.
பிறப்பு:-
ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் ஜூலை-08, 1895இல் பிறந்தார்.
மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டப் படிப்பை முடித்தார்.
கல்வி நிறுவனங்களில் ஆசிரியப் பணியைத் தொடங்கியதோடு, தனது உயர் கல்வியையும் தொடர்ந்தார். முதலில் ஆசிரியர் உதவியாளர், அதைத் தொடர்ந்து ஆசிரியர், விரிவுரையாளர், பேராசிரியர் எனப் படிப்படியாக உயர்ந்தார்.
இயல்-கணித அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். மாஸ்கோ லெபடெவ் இயற்பியல் கழகத்தில் கோட்பாட்டு இயற்பியல் துறைத் தலைவராக 1934 முதல் 1971 வரை பணியாற்றினார்.
ஆய்வுகள்:-
திடப்பொருட்களின் மேற்பரப்பில் காணப்படும் வினோத வடிவிலான எலெக்ட்ரான் பிணைப்பு, திடப்பொருட்களில் சிதறுண்ட ஒளியின் குவான்டம் கோட்பாடு ஆகியவை குறித்து இவரது ஆரம்பகால ஆராய்ச்சிகள் இருந்தன.
திரவப் பொருட்களின் வழியாக காமா கதிர்கள் கடந்து செல்லும்போது ஒளி உமிழப்படுகிறது என்பதை 1934-ல் கண்டறிந்தார்.
பிறகு சார்பியல் கோட்பாடு, குவான்டம் இயக்கவியல் பற்றிய ஆராய்ச்சிகளில் இவரது கவனம் திரும்பியது. "அணுத் துகள்களின் எதிர்வினைகளை விளக்கும் முறையை" வகுத்தார்.
1940-50ம் ஆண்டுகளில் ‘சோவியத் தெர்மோநியூக்ளியர் குண்டு’ திட்டத்தில் இணைந்து பணியாற்றினார். "ஹைட்ரஜன் குண்டு தயாரிப்பதற்கான கோட்பாட்டுப் பிரிவின் தலைவராக" பணிபுரிந்தார். முதல் ஹைட்ரஜன் குண்டுவெடிப்பு சோதனை வெற்றிக்குப் பிறகு தன் பதவியை ராஜினாமா செய்தார்.
கதிர்வீச்சு தொடர்பாக ‘டேம் டான்காஃப் அப்ராக்ஸிமேஷன்’ என்ற எளிய கணக்கீட்டு முறையைக் கண்டறிந்து அறிமுகப்படுத்தினார்.
மின்காப்புப் பொருள் வழியாக மின்சுமையுடன் கூடிய பொருள் கடந்து செல்லும்போது "மின்காந்தக் கதிர்வீச்சு" வெளிப்படுகிறது என்பதைக் கண்டறிந்த 3 சோவியத் ஆராய்ச்சியாளர்களில் இவரும் ஒருவர். ‘செரன்கோவ் வாவிலோவ் விளைவு’ எனப்படும் அந்த கண்டுபிடிப்புக்காக அவர்களுடன் சேர்ந்து 1958-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசை இகார் டேம் பகிர்ந்துகொண்டார்.
இதன்மூலம், எலெக்ட்ரான், புரோட்டான் போன்ற துகள்களின் திசைவேகத்தை கணக்கிட முடியும்.
விருதுகள்:-
1967- லொமோனோசோவ் தங்க பதக்கம்,
1958- இயற்பியல் நோபல் பரிசு,
1954 -சோஷலிஸ்ட் தொழிலாளர் ஹீரோ ஆணை ஸ்டாலின் பரிசு,
இறப்பு:-
தனது வாழ்வில் இறுதி வரை,
அறிவியல், கணித ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட இவர்,ஏப்ரல்-12, 1971இல், தனது 75 வது வயதில் மாஸ்கோ, ரஷியாவில் மரணமடைந்தார்.
ஏப்ரல்-12. சோவியத் ரஷ்யா இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர்- இகோர் எவ்ஜெனீவிச் டாம் (Igor Yevgenyevich Tamm) மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
08:21
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
08:21
Rating: 5


No comments: