Home
APRIL
ஏப்ரல்-12. ஜெர்மன் மருத்துவர், உயிரி வேதியலாளர்- ஓட்டோ ஃபிரிட்ஸ் மெயர்ஹாஃப் (Otto Fritz Meyerhof) பிறந்த தினம்.
ஏப்ரல்-12. ஜெர்மன் மருத்துவர், உயிரி வேதியலாளர்- ஓட்டோ ஃபிரிட்ஸ் மெயர்ஹாஃப் (Otto Fritz Meyerhof) பிறந்த தினம்.
08:21
Read
பிறந்த நாள்:- ஏப்ரல்-12.
ஜெர்மன் மருத்துவர்,
உயிரி வேதியலாளர்- ஓட்டோ ஃபிரிட்ஸ் மெயர்ஹாஃப் (Otto Fritz Meyerhof) பிறந்த தினம்.
வாழ்க்கை வரலாறு:-
ஜெர்மனியில் ஹானோவருக்கு அருகே உள்ள ஹில்டஸ்ஹைம் ஏப்ரல்-12, 1884 இல் பிறந்தார். 14 வயதில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
சிறுநீரக பாதிப்பிலிருந்து
உடல்நலம் தேறி பெர்லின் சென்று மருத்துவம் பயின்றார். 1909 இல் மருத்துவப் பட்டம் பெற்றார்.
பணிகள்:-
1912-ல் கீல் பல்கலைக்கழகத்தில் உடலியல் துறை விரைவுரையாளராகப் பணியாற்றினார்.
1936-ல் ஹைடல்பர்க்கில் உள்ள மருத்துவ ஆராய்ச்சிக்கான கைசர் வில்ஹெம் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு,பாரீசில் ஆராய்ச்சித் துறை இயக்குநர், அமெரிக்காவில் பென்சில்வேனியா பல்கலைக்கழகம், ராக்ஃபெல்லர் அறக்கட்டளை இணைந்து உடற்கூறு வேதியியல் துறையின் ஆராய்ச்சிப் பேராசிரியர் பதவி போன்றவை வழங்கப்பட்டது.
ஆராய்ச்சிகள்:-
தசைகளில் ஏற்படும் ஆற்றல் மாற்றங்கள்,
தசை சுருங்கும்போது கிளைகோஜன், லாக்டிக் அமிலமாக மாறும் முறை, செல்களில் ஆக்சிஜனேற்ற வழிமுறைகள், பாக்டீரியாக்களின் சுவாச செயல்முறைகள், ஆக்சிஜனேற்ற செயல்பாட்டில் நார்கோடிக்ஸ், மெத்தலின் ப்ளூவின் விளைவுகள் உட்பட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
ஈஸ்ட் எக்ஸ்ட்ராக்ட் ஆராய்ச்சி மூலம் அனைத்து செல்கள், திசுக்களில் காணப்படும் சுவாசம், ஆல்கஹால் நொதித்தலின் கோ-என்சைமை கண்டறிந்தார்.
நோபல் பரிசு:-
தசைத் திசுக்கள் ஆக்சிஜனை எவ்வாறு உறிஞ்சி அதை லாக்டிக் அமிலமாக மாற்றுகிறது என்ற கண்டுபிடிப்புக்காக இங்கிலாந்து உடற்கூறியலாளர் ஏ.வி.ஹில்லுடன் இணைந்து 1922-ல் உடற்கூறியல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
பதவிகள்:-
லண்டன் ராயல் சொசைட்டியின் வெளிநாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அமெரிக்கா, ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் அறிவியல் அமைப்புகளின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அமெரிக்காவில் பணிபுரிந்த 10 ஆண்டுகளில் மட்டும் 50 கட்டுரைகளை வெளியிட்டார். ஒட்டுமொத்தமாக அறிவியல் இதழ்களில் 400 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
உடலியல் குறித்து இவர் ஆற்றிய விரிவுரைகள் பின்னர் நூலாக வெளிவந்தது.
மறைவு:-
உடற்கூறியல் துறையில் மகத்தான பங்களிப்பை வழங்கிய இவர், அக்டோபர்-06, 1951 இல் தனது 67-வது வயதில் மறைந்தார்.
ஏப்ரல்-12. ஜெர்மன் மருத்துவர், உயிரி வேதியலாளர்- ஓட்டோ ஃபிரிட்ஸ் மெயர்ஹாஃப் (Otto Fritz Meyerhof) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
08:21
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
08:21
Rating: 5


No comments: