Breaking

இன்று உலக அரங்கில் நம்மை தலைநிமிரச் செய்த.. இந்தியாவின் முதல் மருந்து தயாரிப்பு நிறுவனம்... கடந்து வந்த பாதை..







இன்று உலக அரங்கில் நம்மை தலைநிமிரச் செய்த..
இந்தியாவின் முதல் மருந்து தயாரிப்பு நிறுவனம்... கடந்து வந்த பாதை..

இந்­தி­யாவில், முதன்­மு­த­லாக மருந்து தயா­ரிப்பில் ஈடு­பட்டு, தற்­போது நலி­வ­டைந்­துள்ள, பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் பார்­மா­சூ­டிக்கல்ஸ், இந்­துஸ்தான் ஆன்­டி­ப­யோடிக்ஸ் ஆகிய நிறு­வ­னங்­களின் பெரும்­பான்மை பங்­கு­களை விற்க, மத்­திய அமைச்­ச­ரவைக் குழு ஒப்­புதல் அளித்­துள்­ளது.



இத்­துடன், நலி­வுற்ற, ஐ.டி.பி.எல்., – ஆர்.டி.பி.எல்., ஆகிய மருந்து நிறு­வ­னங்­களை மூடவும், ஒப்­புதல் அளிக்­கப்­பட்டு உள்­ளது. முதற்­கட்­ட­மாக, மேற்­கண்ட நான்கு நலி­வுற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு சொந்­த­மான உபரி நிலம் விற்­பனை செய்­யப்­பட்டு, அவற்றின் கடன்கள் அடைக்­கப்­படும். 

ஏல முறை விற்­பனை மூலம் கிடைக்கும் தொகை, சுய­வி­ருப்ப ஓய்வில் செல்லும் ஊழி­யர்­க­ளுக்கு அளிக்­கவும் பயன்­ப­டுத்திக் கொள்­ளப்­படும்.கடந்த, 2003 – 04ம் நிதி­யாண்டில், பொதுத் துறையைச் சேர்ந்த, ஜெஸாப் அண்ட் கோ நிறு­வ­னத்தின் பெரும்­பான்மை பங்­கு­களை, மத்­திய அரசு, தனி­யா­ருக்கு விற்­பனை செய்­தது. 



இதை­ய­டுத்து, 12 ஆண்­டு­க­ளுக்கு பின், கடந்த செப்­டம்­பரில், பாரத் பம்ப்ஸ் அண்ட் கம்­ப­ரசர்ஸ் நிறு­வ­னத்தின் பெரும்­பான்மை பங்­கு­களை விற்க, மத்­திய அமைச்­ச­ரவைக் குழு ஒப்­புதல் அளித்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

பிர­பல விஞ்­ஞா­னி­யான, ஆச்­சார்யா பிர­புல்லா சந்­திர ராய், 1901 ஏப்­ரலில், பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் பார்­மா­சூ­டிக்கல்ஸ் ஒர்க்கஸ் நிறு­வ­னத்தை, கோல்­கட்­டாவில் துவக்­கினார். 

இதன் நிர்­வா­கத்தை, 1977ல் கைப்­பற்­றிய மத்­திய அரசு, 1981ல், பொதுத் துறை நிறு­வ­ன­மாக மாற்றி, பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் பார்­மா­சூ­டிக்கல்ஸ் என, பெயர் சூட்­டி­யது. இத்­தொ­ழிற்­சா­லையில், மலே­ரியா நோய்க்­கான குளோ­ரோகுய்ன், பாரா­செட்­டமால் உள்­ளிட்ட மருந்­துகள் தயா­ரிக்­கப்­பட்டு வந்­தன.


No comments:

Powered by Blogger.