Breaking

பொது முடக்கத்தில் இருந்து 100 சதவீதம் தளர்வு களை அளிக்கக்கூடாது..







பொது முடக்கத்தில் இருந்து 100 சதவீதம் தளர்வு களை அளிக்கக்கூடாது..

தமில்க அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை

பொது முடக்கத்தில் இருந்து முழுமையான தளர்வு அளிக்கக்கூடாது என மருத்துவ நிபுணர்கள் குழு தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. பொதுமக்கள் கட்டுப்பாடுகளை படிப்படியாக அகற்ற வேண்டும் எனவும் அது வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது கறோன நோய்த்தொற்று பரிசோதனைகள் ஆகியன குறித்து ஆய்வு செய்திட மாநில அரசின் சார்பில் 19 பேர் கொண்ட குழு நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட பொது முடக்கம் வரும் 17ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது பொது முடக்கத்தில் மேலும் தளர்வு அளிப்பது தொடர்பாக, கரோண தொடர் பரிசோதனைகள் குறித்தும் மருத்துவ நிபுணர்கள் குழு உடன் முதல்வர் அவர்கள் ஆலோசனை நடத்தினார் இதில் மூத்த மருத்துவர்கள் பலர் காணொளி வழியாக ஆலோசனைகளை வழங்கினர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து டாக்டர்கள் செய்தியாளர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டி

கரோனா தொற்று தொடர்பாக அதிக மக்களுக்கு பரிசோதனை செய்யப் பட்டதால் தமிழகத்தில் நோய் பாதிப்பின் தன்மை அறிந்து கொள்ள முடிந்தது இந்த பரிசோதனைகளில் அளவுகளை எக்காரணம் கொண்டும் குறைக்கக் கூடாது என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்

அதிகமானால் கவலை வேண்டாம் பரிசோதனை முடிவுகளில் நோய்தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கவலை வேண்டாம் நோய் பாதிப்பின் நிலையை அறிந்தால்தான் நோயாளிகளை தனிமைப்படுத்தப்படும்
அவர்களை சார்ந்தோரையும் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்..

இறப்பு விகிதம் குறைவு நோய் பரவுவதை கண்டறிவதன் மூலம் தமிழகத்தில் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது நோய் பாதிப்புகளை பரிசோதனைகள் மூலமாக விரைந்து கண்டறிந்துள்ளோம் மேலும் நோய் தொற்று உள்ளவர்கள் உடன் தொடர்பில் இருந்தவர்களை அழியும் பணியும் சிறப்பாக நடைபெற்று வருகிறது நோய்த்தொற்று உடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறிகள் ஏதும் இல்லாவிட்டால் அவர்கள் வீட்டில் தனிமை படுத்தப்பட்டு வருகின்றன இதுபோன்ற நடவடிக்கைகளால் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் சோதனைகளின் போது சில நேரங்களில் நோய் தொற்று அதிகமாக இருக்கும் சில நேரங்களில் குறைவாக இருக்கலாம் எண்ணிக்கை அதிகமாவதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை..
முக கவசம் அவசியம் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முக கவசம் அணிய வேண்டும் பணிபுரியும் இடங்களில் முக கவசமும் சமூக இடைவெளி அவசியமாகும்



100 சதவீத அளவுக்கு வாய்ப்பில்லை

 பொது இடத்தில் உள்ள கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த முடியும் 100 சதவீத அளவுக்கு வாய்ப்பில்லை என்றார்

தொற்று நோய் நிபுணர் அவர்கள்..

தொற்று உள்ளவர்களை அதிகளவு கண்டுபிடித்தால் தான் இழப்புகள் குறைந்துள்ளன பிற மாவட்டங்கள் மாநிலங்களில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என அரசை கேட்டுக் கொண்டுள்ளோம் சர்க்கரை இதய நோய்கள் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நோய்தொற்று பாதிக்க அதிக வாய்ப்புகள் இருக்கும் எனவே தொற்றா நோய் உள்ளவர்களையும் வயதானவர்களையும் தனிமைப்படுத்தி வைக்க அரசை கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார்..

No comments:

Powered by Blogger.