Breaking

வெளி மாவட்டத்தில் தங்கியவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவது எப்படி அமைச்சர் அவர்கள் தகவல்..







வெளி மாவட்டத்தில் தங்கியவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவது எப்படி அமைச்சர் அவர்கள் தகவல்..

ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அளித்த பேட்டி..

 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 1ஆம் தேதி தேர்வு தொடங்க உள்ளது. தேர்வு எழுத உள்ள மாணவர்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று போக்குவரத்து

முடக்கம் காரணமாக  அங்கேயே தங்கி இருக்க வாய்ப்பு உள்ளது இது போன்ற பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இது தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வரும் 19ஆம் தேதி தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும்



பத்தாம் வகுப்பு தேர்வுகளை ஒன்றாம் தேதி நடத்துவது என கல்வியாளர்கள் குழு ஆலோசனைப்படிதான் முடிவு செய்யப்பட்டது. முதல்வரின் ஒப்புதல் பெற்று தான் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க கலெக்டர்கள் தேர்வு மையங்களை பார்வையிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களை நேரடியாக தேர்வு மையத்திற்கு அழைத்து சென்று திரும்பவும் கொண்டு வந்துவிடும் அதற்கான ஏற்பாடுகளை கலெக்டர்கள் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது மாணவர்களுக்கு யூடியூப் கல்வி சேனல் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு ஆன்லைனில் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் ஏறக்குறைய 3000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் தேர்வாகும் மாணவர்கள் கல்லூரிகளில் தங்கவைக்கப்பட்டு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று இவ்வாறு செங்கோட்டையன் அவர்கள் கூறினார்..

No comments:

Powered by Blogger.