உடல் சூடு அதிகமாக உள்ளவரா நீங்கள் உடல் சூட்டை 2 நிமிடத்தில் குறைக்க வழிகள்!
உடல் சூடு அதிகமாக உள்ளவரா நீங்கள் உடல் சூட்டை 2 நிமிடத்தில் குறைக்க வழிகள்!
தோலில் வறட்சியை ஏற்படுத்தும் கண்டகண்ட வாசனை சோப்புகளை பாவித்து களைத்து விட்டீர்களா, இதோ பாசிப் பயறு, கடலைமாவு பயன்படுத்துங்கள். பலன் பெறுங்கள்.
கொப்பளம், பரு மற்றும் அம்மை போன்றனவற்றிற்கு வேப்பிலையும் மஞ்சளும் கலந்து அரைத்து பூசசுதல் நல்ல பயனளிக்கும்.
நீர் வேட்கை, உடல் எரிதல் இவற்றிற்கு சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசி குளிக்கலாம்.
வெப்பத்தால் உள்ளங்காலில் எரிச்சல் ஏற்படும் போது இரவு படுக்கும் முன் உள்ளங்காலில் விளக்கெண்ணெய் பூசி வெதுவெதுப்பான நீரில் 5 முதல் 10 நிமிடம் உள்ளங்காலை மூழ்க வைத்திருந்தால் உடல் சூடு தணிவதுடன், அடி வயிற்றில் தொப்புளை சுற்றி ஆமணக்கு எண்ணெய் தடவவுதல் மற்றும் தலைக்கு சந்தனாதி தைலம் தடவி வருதல் என்பன மூலம் உடல் வெப்பம் தணியும்.
கோடை காலத்தில் எமது உடல் உஷ்ணத்தை தவிர்ப்பதற்கு தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதுடன், இளநீர் சாப்பிடுவதுடன் தயிர், மோர், பால், தர்பூசணி, நார்த்தை, நெல்லி, பேயன் வாழை கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், மாதுளை, எலுமிச்சை, வெள்ளரி, திராட்சை, தினம் சேர்த்துக் கொள்வது கட்டாயம்.
வெந்தயத்தை சுத்தமான தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலையில் தடவுவதுடன், தண்ணீரில் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் அந்நீரை அருந்தலாம். தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதால், வெயிலின் தாக்கத்தை குறைக்க முடிவதுடன், விளாமிச்சை வேர் மற்றும் வெட்டி வேர் கலந்த நீர் குடிக்கலாம். மேலும், வயிறு எரிச்சலுக்கு பசு நெய் நன்று. கீரைகளை சூப் வைத்து குடிக்கலாம். அவற்றை துவையல், மசியல் செய்து உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
கீரைகளின் பயன்கள்:
கேழ்வரகு மற்றும் கம்பு போன்றவற்றை முதல் நாள் மாலை சமைத்து நீரிலிட்டு அடுத்த நாள் மோர் சேர்த்து கூழாக சாப்பிட்டு வரும் போது உடல் வெப்பம் குறையும்.வாழைப்பூ, பிரண்டை, கீரைத்தண்டு மற்றும் சிறு தானியங்கள் சேர்த்துக் கொள்வதால் உடல் சூட்டை தவிர்ப்பதுடன், கோடை நோய்களில் இருந்து தப்பிக்க முடியும்.
மருதாணியினை பாதத்தில் தடவி வரும் போது எரிச்சலை நீங்குவதுடன், மருதாணி பூவை இரவில் தலையணை அடியில் வைத்து படுக்கும் போது நிம்மதியான தூக்கம் கிடைப்பதுடன், உடல் வெப்பமும் சீராகும்.இதனை விட மருதாணி, சோற்றுக் கற்றாழை உடல் வெப்பத்தை போக்கும் மூலிகைகளாகும்.
எண்ணெய் குளியல்:
தினமும் 2 முறை குளித்தல் மற்றும் எண்ணெய் குளியல் என்பன உடல் சூட்டை முற்றிலும் தவிரக்கக் கூடியதாக காணப்படுவதனால் எண்ணெய்யை உச்சி முதல் உடலில் அனைத்து பாகங்களிலும் சூடு எழுப்பாமல் குளிர தேய்க்க வேண்டும். இங்கு; உடலை பிடித்தும், மெதுவாக தட்டியும் வருவதால், ரத்த ஓட்டம் அதிகமாகுவதுடன், எண்ணெய்யை தேய்த்து சிறிது நேரம் ஊறவிடுவதனால், எண்ணெய் சத்துக்கள் உடலினுள் செல்லும்.
மேலும், கஸ்தூரி மஞ்சள், கடுக்காய் தோல், மிளகு, நெல்லிப்பருப்பு மற்றும் வேப்ப விதைகள் போன்றனவற்றை அரைத்து காராம் பசுவின் பாலுடன் கலந்து கொதிக்க வைத்து தலையில் தேய்த்து குளித்தால் எந்நாளும் பிணிகள் வராது, என சித்தர்களின் பதார்த்த குண சிந்தாமணி என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக காரம், புளிப்பு, உப்பு என்பனவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுதலை குறைத்தல், தினம் வீட்டிற்குள் தரையை தண்ணீரால் துடைத்தல் அல்லது சிறிதளவு தண்ணீரை மதியம் தெளித்து விடுதல், இலவம் பஞ்சு படுக்கையில் படுத்தல், வீட்டை சுற்றி மரம் வளர்த்தல் அதாவது மாடி வீடுகளில் வசிப்பவர்கள் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில் மொட்டை மாடியில் தோட்டம் அமைத்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்த்தல் என்பன நல்லது. இவ்வாறாக, வீட்டினுள் காற்றோட்டம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் நல்லது.
No comments: