Breaking

உருளைக்கிழங்கு வதக்கல் செய்வது எப்படி ...






உருளைக்கிழங்கு வதக்கல் செய்வது எப்படி ...

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 3, 
பெரிய வெங்காயம் - 1, 
பச்சை மிளகாய் - 2, 
பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன், 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், 
தனி வத்தல் பொடி - 1 டீஸ்பூன், 
தனியா தூள் - 1 டீஸ்பூன், 
கறிமசால் பொடி - 1/2 டீஸ்பூன், 
பொடியாக நறுக்கிய தேங்காய் - 1/2 மூடி, 
எண்ணெய், உப்பு - தேவையான அளவு, 
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிது


செய்முறை

உருளைக்கிழங்கை தோலெடுத்து நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, பெருஞ்சீரகம் போட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

உருளைக்கிழங்கு சேர்த்து பாதி வதங்கும் போது சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். நீர் தெளிந்து நன்றாக வதங்கி வரும்போது பொடிகள் அனைத்தையும் சேர்க்கவும். உப்புச் சேர்க்கவும். தேங்காயை சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வதக்கி இறக்கி வைக்கவும். தேங்காய் விரும்பாதவர்கள் தேங்காய் போடாமலும் செய்யலாம். கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான உருளைக்கிழங்கு வதக்கல் தயார்.

No comments:

Powered by Blogger.