Breaking

வைட்டமின் டி குறைபாட்டை போக்கும் உணவுகள் எவை தெரியுமா....?






வைட்டமின் டி குறைபாட்டை போக்கும் உணவுகள் எவை தெரியுமா....?

உடல் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின் டி குறைபாடு உடலில் பல்வேறு உபாதைகளையும் உண்டாக்குகிறது. சிலருக்கு அதிகப்படியான வைட்டமின் டி குறைபாடு உண்டாகும் போது முடக்குவாதம், நுரையீரல் பிரச்சனைகளும் அதிகரிக்கும்.

தினமும் ஒரு தம்ளர் பால் குடிப்பதால் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தில் 20 சதவீதம் வரை பெறமுடியும். பாலில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் ரைபோஃப்ளேவின் உள்ளது. பசும்பால் போன்று சோயா பாலிலும் வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்திருக்கிறது.

உணவு பொருள்களில் காளானில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. சூரிய ஒளியிலேயே வளரும் இந்த மஷ்ரூமில் வைட்டமின் பி1 பி2 பி5 சத்துகள், காப்பர் போன்றவை நிறைந்திருக்கிறது.


மீன் விரும்பும் பிரியர்கள் உணவில் அதிகப்படியாக சால்மன் மீன் சேர்த்துவருவது நல்லது. வைட்டமின் டி, கால்சியம், செலினியம், பாஸ்பரஸ் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த மீன் இது. ஆய்வு ஒன்று கூறும்போது இந்த மீனை தொடர்ந்து சாப்பிடும் போது எலும்புகளின் அடர்த்தியை அதிகரிப்பதாக கூறுகிறது.

தினமும் காலை உணவோடு ஒரு தம்ளர் ஆரஞ்சு பழச்சாறையும் எடுத்துகொள்ளுங்கள். இது வைட்டமின் மற்றும் கால்சியம் நிறைந்தது என்பதால் வளர்ந்த நாடுகள் இதை வலியுறுத்துகின்றன.

முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளது. சூரிய ஒளி படாமல் ஹார்மோன் ஊசிகள் உதவியால் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளின் முட்டையில் இந்த வைட்டமின்களை எதிர்பார்க்கமுடியாது. நாட்டு கோழிகள் வெயிலில் அலைந்து திரிந்து திறந்த வெளியில் வளரும் கோழிகளிடமிருந்து பெறும் முட்டைகளை எடுத்துகொள்வது நிச்சயம் பலனளிக்கும்.

வாரம் மூன்று நாள் காலை உணவாக ஓட் மீல் எடுத்துகொள்வது உங்களுக்கு கிடைக்க வேண்டிய வைட்டமின் டி அளவை ஓரளவு கொடுக்கும். பிள்ளைகள் வளரும் போதே அவர்களை சூரிய ஒளி படாமல் வீட்டிற்குள் வளர்ப்பதை தவிர்த்து திறந்த வெளியில் விளையாட அனுமதியுங்கள். தினமும் காலை 10 .30 மணி முதல் 12 மணிக்குண்டான நேரத்தில் பத்துநிமிடங்களாவது உடலில் வெயில்பட அனுமதியுங்கள். இவை வைட்டமின் டி குறைபாட்டை போக்க உதவும்.

No comments:

Powered by Blogger.