Breaking

மாணவர்களுக்கு சொந்தப் பணத்தில் உதவித்தொகை வழங்கிய ஆசிரியை







மாணவர்களுக்கு சொந்தப் பணத்தில் உதவித்தொகை வழங்கிய ஆசிரியை

தொழுதூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியை மாணவர்களின் பெற்றோருக்கு தனது சொந்த பணத்தில் தலா ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கினார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொழுதூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி உள்ளது இங்கு 41 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் இந்த பள்ளி தலைமை ஆசிரியை ஜெகஜோதி மாணவ மாணவிகளை அவர்களது பெற்றோருடன் பள்ளிக்கு புதன்கிழமை வரவழைத்தார். அப்போது பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு தலைமை ஆசிரியர் ஜெகஜோதி தனது சொந்த பணத்திலிருந்து ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கினார். இதை எதிர்பாராத மாணவர்களின் பெற்றோர் வியப்படைந்தனர். மேலும் பள்ளி துப்புரவு பணியாளர் சத்துணவு சமைக்கும் தலா ஆயிரம் வீதம் மொத்தம் 43 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கினார்

No comments:

Powered by Blogger.