Breaking

டிசம்பர் - 07. இன்றைய நாளின் முக்கிய தினங்கள் பற்றி அறிவோம்..


டிசம்பர் - 07. இன்றைய நாளின் முக்கிய தினங்கள் பற்றி அறிவோம்..

1. கொடிநாள் வரலாறு..

உலகத்தின் பல்வேறு நாடுகளில் சுபகாரியங்கள் செய்வதற்காக நிதி திரட்டுவது என்பது ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தினத்தில் நடைபெற்று வருகிறது.அன்றைய தினம் சமூக ஆர்வலர்களும் பொது சேவையில் ஈடுபட்டுள்ள தொண்டர்களும் வீதிகளில் வலம் வந்து பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி அவற்றை தொண்டு அமைப்புகளிடமும் அரசாங்கத்திடம் ஒப்படைப்பார்கள். பொதுமக்கள் அளிக்கும் நன்கொடை பெற்றுக் கொண்டதன் அடையாளமாக ஒரு கொடியை அளிப்பார்கள். அதனை சட்டையில் அணிந்துகொள்ளலாம். ஆண்டுதோறும் டிசம்பர் 7ஆம் தேதி இந்தியாவின் கொடி நாள் கொண்டாடப்படுகிறது.அதற்குத் திரட்டப்படும் நிதி இராணுவத்தினரின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது.


2. காவல்துறை அறிமுகமான தினம்.

இன்று காவல்துறை  அறிமுகமான தினம்.இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட போது நம் பாதுகாப்பிற்காக கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1792-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் தேதி காவல்துறை ஆரம்பிக்கப்பட்டது.சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அமைதியை ஏற்படுத்துவதே அவரது முக்கிய நோக்கமாகும்.


3. சர்வதேச விமான போக்குவரத்து தினம்.

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் ஏழாம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.ஐ.நா சபையானது 1996 அங்கீகரித்து நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும்  அதனை வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

No comments:

Powered by Blogger.