Breaking

தினம் ஒரு திருக்குறள் அறிவோம்


திருக்குறள் 611, 62.ஆள்வினையுடமை


அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.


மணக்குடவர் உரை :-

ஒரு வினையைச் செய்தல் அருமையுடைத்தென்று முயலாமையைத் தவிர்தல் வேண்டும்: முயற்சி தனக்குப் பெருமையைத் தருமாதலால். இது வினைசெய்து முடித்தல் அரிதென்று தவிர்தலாகாதென்றது.

மு.வரதராசனார் உரை :-


இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.

மு.கருணாநிதி உரை :-


நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை :-


நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.

ஆங்கில மொழிபெயர்ப்பு :

Say not, 'Tis hard', in weak, desponding hour, 
For strenuous effort gives prevailing power.


ஆங்கில உரை :

Yield not to the feebleness which says, "this is too difficult to be done"; labour will give the greatness (of mind) which is necessary (to do it).

No comments:

Powered by Blogger.